பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வரவேற்றார். பல நாட்கள் விவாதங்கள் நடந்தன; விருந்துகளும் நடைபெற்றன. சிவாஜியின் கருத்துக்கு வெங்காஜி சிறிதும் விட்டுக்கொடுக்க வில்லை. சிவாஜி வெங்காஜியை அனுப்பிவிட்டார்." | திருவதி என்பது திருவதிகையாகும். இது தென்ஆர்க்காடு மாவட்டத் தில், பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது. இத்திருவதியில் சிவாஜியைப் பார்த்ததாகக் கூறாமல் கொள்ளிடக் கரையில் உள்ள திருமழபாடியில் சிவாஜியை வெங்காஜி கண்டதாகவும், சிவாஜி பங்கு ஜாகீர்களைத் தனக்கு அளிக்குமாறு கேட்டார் என்றும், வெங்காஜி மறுத்தமையோடு சிவாஜியின் சினத்துக்கு அஞ்சி, ஐந்து குதிரை வீரரோடு ஒரு கட்டுமரத்தின் உதவியால் கொள்ளிடத்தைக் கடந்தார் என்றும், ஜகந்நாதபந்த், கோனேரிபந்த், சிவாஜி பந்த், நீலோஜி நாயக் ஆகியோரைச் சிவாஜி சிறையில் வைத்தார் என்றும் கூறப்படுகிறது.' இதனையே ஆர். சத்யநாத ஐயர் அவர்களும் தம் " மதுரை நாயக்க மன்னர்கள் " என்ற நூலில் கூறுவர் (பக் 252). மோடி தமிழாக்கக்குறிப்பில், திருமழபாடியில் சிவாஜியைக்கான ஏகோஜி சென்றார் என்றும், இருவருக்கும் வேறுபாடு முற்றியதென்றும், ஏகோஜி கொள்ளிடத்தைக் கடக்கும்பொழுது பாபாஜி பவார் என்பவர் ஏகோஜியைத் தன் முதுகில் தூக்கிக்கொண்டு கரையேற்றினார் என்றும் காணப்பெறு கின்றன. மகாராட்டிரத்தில் மகாராட்டிர அரசர் வரலாறு எழுதிய ஆசிரியர் கூற்றிலும், தமிழ் நாட்டில் மகாராட்டிர வரலாறு எழுதிய ஆசிரியர் கூற்றிலும் வெங்காஜியும் சிவாஜியும் சந்தித்த இடம்பற்றி வேறுபாடு காணப்படுவது சிந்தித்தற்குரியது. மோடி எழுத்தில் இச்செய்தி 1-12-1847இல் இடம்பெற்றது: ஏறத்தாழ இச்சந்திப்பு நிகழ்ந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்தாளப் பெற்றது; தம் முன்னோர் ஏகோஜிக்குச் செய்த உதவியைச் செவி வழியாக அறிந்து கூறுவது. இதில், இருவரும் சந்தித்த இடம் திருமழபாடி என்று உள்ளது. இதுவே சரியாக இருக்கக்கூடும்.' - _ 1. History of the Maratha People- Kincaid & Parasnis – Pages 256-257 (1968) S Chand & Co, Delhi. History of the Marathas – Grant Duff P. 125, ||| Edition, 1873 2. -Maratha Rule in the Carnatic — Srinivasan, C. K., Pages, 160-161: 3. 8–105: 7–671- - 4. " Sivaji encamped at Tirumalwadi on the Coleroon about 10 miles north of Tanjore ”, P. 237, New History of the Marathas Vol. II, by S. Sardesai (1946). .