பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அரச காரியங்களைக் கவனித்தலை நீக்கினார்; ஒரு பைராகிபோல் ஆனார். வெங்காஜியின் இச்செயல்களை ரகுநாத் சிவாஜிக்குத் தெரிவித்தார். சிவாஜி வெங்காஜிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். (அது இங்குக் கண்ட கடிதம் 1 ஆகும்.) வெங்காஜியின் மனநிலை மாறியுள்ளமையும், ஒரு துறவி போன்று இருத்தலையும் குறிப்பிட்டு, அங்ங்னம் இருத்தல் அரசனுக்கு அழகன்று என்றும், எப்பொழுதும்போல் உற்சாகத்துடன் இருக்கவேண்டும் என்றும், காலத்தை வீணாக்கக்கூடாது என்றும், தன்னைச் சேர்ந்தவர்கட்கு வேலை கொடுத்து மக்கட்குச் சேவை செய்து புகழீட்டவேண்டும் என்றும், ரகுநாத்பந்த் சொற்படி நடத்தல் வேண்டும் என்றும் நல்லறிவு கூறினார். இந்தக் கடிதமே சிவாஜியின் கடைசிக் கடிதம் ஆதல் கூடும். சின்னாட் களுக்குப் பிறகு, 5-4-1680இல் சிவாஜி இறந்தார். வெங்காஜி அச்சமின்றித் தஞ்சையில் ஆட்சிபுரியலானார். இணைப்பு : சிவாஜி வெங்காஜிக்கு எழுதிய கடிதங்கள்* கடிதம் எண் 1 ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவரும், திருமகள் பொருந்திய பட்டத்தரசி களுடன் கூடிய அரசச் செல்வம் பொருந்தியவருமான ஏ கோஜி அரசர் அவர்கட்குச் சிவாஜி அரசரின் ஆசிகள். நலம். நலம் அறிந்து தங்கள் நலத்தை எழுதுக: மேலும் " கைலாசவாசி ' சாகிப் அவர்கள் இறந்துபட்டு இப்பொழுது 13 ஆண்டுகள்' கழிந்தன. பேரரசரின் செல்வம், பிற பொருள்கள், யானை குதிரை விருதுகள் முதலியன யாவும் கொடுத்து ரகுநாத்பந்த் உங்களை அரசாட்சியில் அமரச்செய்து எல்லா அரசையும் தங்கள் கையில் ஒப்புவித்தார். இங்ங்ணம் என் பாதிப்பங்கினையும் 18 ஆண்டுகளாகத் தாங்களே நுகர்கிறீர்கள். நானோ எனக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்க முடியாமல் மிகத் தொலைவில் இருக்கிறேன். நல்ல பேச்சால் தாங்கள் கொடுக்கமாட்டீர்கள் என்று கருதிப் பதின்மூன்று ஆண்டுகள் தள்ளிக் கொண்டு வந்துவிட்டேன். நானும் போனது போகட்டும் ; தாங்களும் பேரரசரின் மைந்தர்தானே ! உண்கிற வரையில் உண்ணட்டும் ' என்று மனத்தில் கொண்டு, ' நான் இப்பொழுது செல்வச் செழிப்புடன் இருக்கிறேன்; என் பங்கை எப்பொழுது பெறவேண்டுமோ அப்பொழுது வழக்கிட்டுப் பெறலாம்” என்று இருந்தேன். அரசு வேலையின் 7. திராண்ட் டஃப் அவர்கள் எழுதிய நூலில் 181ஆம் பக்கத்தின் அடிச்குறிப்பில் இக்கடிதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பெற்றுள்ளது 8. This letter was amongst the last that Shivajee ever dictated - Grant Duff, P. 131

  • இக்கடிதங்கள் இரண்டும் மராட்டிய மொழியில் உள்ளன. இவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர் சரசுவதி மகால் நூல் கிலேய மராட்டி பண்டிதர் திரு. பீம ராவ் அவர்கள்

ஆவா.