பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 10. பாதிப்பங்கு கொடுத்தால் "பான்ஹால்" பகுதியில் மூன்று லக்ஷம் ஹொன்ன மதிப்புள்ளவற்றைக் கொடுப்பதாகச் சிவாஜி எழுதினார் என்று (பக். 129இல்) கிராண்டு டஃப் குறித்தார். ஆனால் கின்ஸெயிட், " தஞ்சையினின்று ஏகோஜியை வன்மையால் நீக்கிப் பன்ஹாலாவில் நிலம் தருவதாகச் சிவாஜி எழுதினார்." என்று தம் நூலில் எழுதியுள்ளார் (பக்கம் 259). 11. குறிப்பு 2 காண்க. 12. மூன்று லக்ஷம் வராகன் வருவாய் உள்ள நிலங்களைத் தரச் செய்வேன் என்று எழுதியதாக டஃப் கூறுவார். 13. இதன்பிறகு வெங்காஜி, தன் மனைவி தீபாபாயின் சொற்படி ரகுநாத் பந்த் அவர்கட்கு எழுதி அவரைத் தஞ்சைக்கு வரச்செய்து, அவர்வழி சிவாஜியுடன் சமாதான ம் செய்துகொண்டார். 14. ரகுநாத் பந்த். இவர் வெங்காஜியின் தந்தையாகிய ஷஹாஜியின் அமைச்சர்களுள் ஒருவர். ரகுநாத் நாராயண் ஹனுமந்தே என்பது முழுப்பெயர். ஷஹாஜி, தன் மகன் வெங்காஜி சிறப்பாக அரசு நடத்தற்கு இவ்வமைச்சரை அனுப்பினர். வெங்காஜி 1875இல் தஞ்சையைக் கைப்பற்றிய பிறகு இவரும் தஞ்சையில் அமைச்சராக இருந்தார். இருவருக்கும் ஒருசமயம் மனவேறுபாடு ஏற்பட்டமை ால், இவர் தஞ்சையை விட்டுச் சிவாஜியிடம் போய்விட்டார். பிறகு சிவாஜியோடு வெங்காஜி சமாதானம் ஏற்படுத்திக்கொள்வதற்காக, ரகுநாத்பந்த் மீண்டும் தஞ்சைக்கு வருமாறு அழைக்கப்பெற்றார். சிவாஜியின் இசைவின் பேரில் ரகுநாத் தஞ்சைக்கு வந்தார் (A History of the Maratha People – Kincaid - Pages 254, 259) 15. கைலாசவாசியான என்பது இறந்த என்று பொருள்படும் : இங்கு இறந்துபோன வடிஹாஜியைக் குறிக்கும். இவர் கி. பி. 1664 ஜனவரித் திங்களில் இறந்தார். குறப்பு : (1) இதிற்கண்ட இரண்டாவது கடிதம் எழுதிய சந்தர்ப்பம் : தஞ்சையும், சிவாஜி தென்னகத்தில் வென்றுகொண்ட அனைத்து நாடு களும் சிவாஜிக்கு உரியனவாக்கி 1680இல் பிஜபூர் சுல்தான் சிவாஜிக்குச் சன்னது செய்து கொடுத்தார். இது வெங்காஜிக்குக் கலக்கத்தை விளை வித்தது. இதல்ை தன் சுயேச்சை பறிக்கப்பட்டது என்று வெங்காஜி நினைத் தார் : வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டார் அரசு காரியங்கள் கவனித் தலை நீத்தார் : பைராகிபோல் ஆனார். வெங்காஜியின் இந்நிலையை ரகுநாத்பந்த் சிவாஜிக்குத் தெரிவித்தார். சிவாஜி தன் இளவலுக்கு ஊக்கம் தந்து இக்கடிதம் எழுதினார்.