பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G கும்பினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள்உடன்படிக்கைகள் துளஜா என்ற மராட்டிய மன்னர், 1763 முதல் 1787 வரை தஞ்சையில் ஆட்சிபுரிந்தவர் ஆவர். இவர் சேதுபதியுடன் போர் செய்தார். இது நவாபுக்கு வருத்தத்தைத் தந்தது. ஆகவே தஞ்சையின் மேல் நாவாபு போர் தொடுக்க எண்ணினார் 1769 முதல் தஞ்சை மராட்டிய மன்னர் தமக்குச் செலுத்தவேண்டிய தொகையை (பேஷ்கஷ் ) கொடுக்கவில்லை என்று கூறலானார். இஃது உண்மையன்று என்பது பின்வரும் ஆவணக்குறிப்பினால் அறியப்பெறும் :- + = ' கி. பி. 1771 நவாபின் தர்பார் செலவிற்காக ரூ. 2000" கி. பி. 1771 நவாபுக்குக் கொடுக்க வேண்டியதற்காக மிஸ்தர் ஜேம்ஸ் ஹேவ், மிஸ்தர் கான் மேஜர் இவர் வழியாக ஹாண்டி தயார் செய்து அனுப்பிய தொகை ரூ. 6,50,000." எனினும் தஞ்சையைக் கைப்பற்றுவதே தன் நோக்கமாகக் கொண்ட நவாப், கும்பினி அதிகாரிகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார். 1771 செப்டம்பர் மாதம் நவாபின் சேனையும் கம்பெனி துருப்புக்களும் ஒன்று சேர்ந்து திருச்சியினின்று தஞ்சை நோக்கிப் படையெடுத்தன. நவாபின் முத்த மகன் உமதத் உல் உமாராவும்"அ ஜெனரல் ஸ்மித்தும் தலைமை தாங்கிப் படைகளை நடத்தினர். துளஜாவுக்கு எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. 1. 1-168 2, 1–164 2. இவன் கி. பி. 1777க்குரிய ஆவணக்குறிப்பில் குறிப்பிடப்பெறுகிறான்; 8-177