பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அதன்படி சித்திரை மாசம் (ஏப்பிரலில்) 1 லக்ஷம் வராகன் செலுத்தவேண்டும்." அங்ங்ணம் அந்த ஆண்டே சித்திரை மாசத்தில் கொடுக்கவேண்டிய தொகை கொடுத்தமை பற்றி விரிவாகக் காணப்படுகிறது." ஒரிரு செய்திகள் பின்வருமாறு : - 8-5-1787 வக்கில் திரியம்பக ஸம்பாஜிக்கு அமர்சிங் கடிதம்கும்பினிக்குச் சித்திரையில் ஒரு லக்ஷம் வராகன் கொடுக்க வேண்டும். மக்லோட் இடம் இங்குள்ள பட்டாளச் செலவுக்காக 10 ஆயிரம் வராகன் அதுபோக 90,000 வராகனுக்கு ஹாண்டிகள் அனுப்பினதற்கு விவரம் ..........." இந்த உடன்படிக்கையில் எட்டாவது ஷரத்து-போர் நிகழுமாயின் 5இல் 4. பங்கு வருமானம் போர்ச் செலவுக்காகப் பயன்படுத்தப்படும் என்பதாகும். இந்த ஷரத்து செயல்படுத்தப்பட்டது என்று பின்வரும் குறிப்புக்கள்' தெரிவிக்கின்றன:- o பெங்காலிலிருந்து வந்ததில் இராஜ்யத்தை ஜப்தி செய்கிறது என்று வந்திருக்கிறது. இராசாவுக்கு ஐந்தாவது பாகம் என்று தீர்ந்திருக்கிறது." கி. பி. 1787இல் ஏற்பட்ட உடன்படிக்கையைக் கும்பினியார் மாற்றி அமைக்க நினைத்தனர். ஆகவே 1792இல் வேறொரு உடன்படிக்கை நிறை வேறியது. அதில் 7ஆவது ஷரத்து அரசர் கொடுக்கவேண்டிய தொகையைக் கொடுக்காவிடில் மன்னார்குடி, திருவாடி, மாயவரம், பட்டுக்கோட்டை ஆகிய கபாக்கள் வசூலைக் கும்பினியார் ஏற்றுக்கொள்ளலாம் என்பதாகும். -- இந்த ஷரத்தின்படி அந்தச் சுபாக்களைத் தம் வசம் ஒப்புவிக்க வேண்டும் என்று ரெஸிடெண்டு மக்லோட் அமர்சிங்கைக் கேட்டதுடன், புது உடன்படிக்கையின் மாதிரிப் படிவமும் கொணர்ந்தார். அமர்சிங் கையெழுத்து இட மறுத்தார். மக்லோட் துருப்புக்களைக் கொணர்ந்து நிறுத்தினார்; அரசரிடம் சென்றார். அரசர் கையொப்பமிட்டார். இங்ங்ணம் அச்சுறுத்திக் கையொப்பம் பெற்றிருந்த போதிலும் மக்லோட் அரசர் விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் கையொப்ப் - o * † 16. - Article 2. His Excellency the Rajah of Tanjore will contribute towards the Military Peace Establishment and shall pay into the Treasury of the said United Company the annual sum of 4 Laks of Pagodas...... divided into kists payable at the following periods: Nov. 20,000; Dec. 50,000; Jan. 50,000; Feb. 90,000; March 90,000; April 1,00,000; Total 4 Lakhs Star Pagodas (Hicky-Tanjore Maratha PrincipalityAppendix) o . 17 8-268 முதல் 277 முடிய 18. 5-528 * திருவையாறு : 19. "The eighth article directed the Rajah to pay to the Company during the war fourfifths of his revenues......”—P. 87, K. Rajayyan. E.