பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அப்பொழுது 12 பண்டிதர்கள் தம் கருத்தைத் தெரிவித்தனர். அவர்களின் பெயர் பின்வருமாறு : 1. பாடலாசார்ய 2. மாதவாசார்ய 3. தாதாராவ் 4. ஜனாசாரி 5. அப்பாசாஸ்திரி 6. ராமாசாஸ்திரி 7. ஸத்யநிதி ஆசார்ய 8. நரசிம்மாசாரி 9. ஐனாசாரி 10. புஜங்கராவ் 11. பாபன்னா 12. மாதவாசார்யருடைய மாப்பிள்ளை. இவர்களுள் (4) ஜனாசாரி சன்னியாசியானார். (6) ராமாசாஸ்திரிக்குப் பல்லக்கும் நாளொன்றுக்கு ஒரு வராகன் சம்பளமும் கொடுக்கப்படலாயிற்று. ஒரிருவர் இறந்துபட்டிருக்கக்கூடும். எஞ்சியவர்கள் விசாரிக்கப்பட்டனர். (3) தாதாராவை விசாரித்தபொழுது தான் பொய் சொன்னதாகப் பலமுறை ஸ்வார்ஷ் முதலாகப் பலர் முன்னிலையிலும் அழுதுகொண்டே சொன்னார். (4) ஜனாசாரியர் தனக்குத் தர்மசாத்திரம் தெரியாதென்று கூறினார். (5) அப்பா சாத்திரி தனக்குச் சாத்திரம் தெரியாதென்றும், அரண் மனைச் செய்திகள் தெரியாதென்றும், பிறர்போல் தானும் கையெழுத்திட்ட தாகவும் அதற்குப் பெரிதும் வருந்துவதாகவும் கடிதத்தில் எழுதிக் கொடுத்தார்." ஸ்த்யநிதி ஆசார்ய (7) என்பவர் அமர்சிங்கின் பக்கம் சொல்லுங்கள் என்று தனாதிகாரி சொன்னதால் கூறியதாகவும், சொல்லாவிடில் தனக்கு விடப்பட்ட மான்யம் பறிபோகும் என்று அஞ்சியதாகவும் கூறினார். (8) நரசிம்மாசாரியார் "அமர்சிங்குக்கு அதிகாரம் உண்டு கையினால் எழுதிக் கொடுக்கமாட்டேன்' என்று சொன்னார். (9) ஐனாசாரியர் பிறர் எழுதியதுபோல் தானும் எழுதிய தாகக் கூறினார். (10, 11) புஜங்கராவ், பாபண்ணு இருவரும் தமக்குச் சாத்திரம் தெரியாதென்றும் 10 பேர் செய்ததுபோல் தாங்களும் செய்ததாகக் கூறினர். இங்ங்னம் தாம் முன்னர்க்கூறிய கருத்தை மாற்றிக் கூறியமையின், இதுபற்றிச் சென்னைக் கெளன்ஸில் இலண்டனுக்கு எழுதியது. 1798 அக்டோபர்த் திங்களில் சரபோஜியை அரசராக்குமாறு இலண்டனிலிருந்து ஆணை வந்தது." சரபோஜி அரசாட்சியை எய்தினார். மோடி தமிழாக்கப் பகுதியில் சரபோஜி பட்டம் எய்திய தேதி 1798.மொஹரம் 15 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது 29-6-1798(இந்தக் குறிப்புள்ள மோடி ஆவணத்தின் தேதி 30-6-1798 ஆகும்) பின்னர் 25-10-1799இல் இரண்டாம் சரபோஜி கும்பினியாரொடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதில் 15 ஷரத்துக்கள் இருந்தன. இவ்வொப்பந்தத்தின்படி வசூல் செய்யும் உரிமை கும்பினியாருக்கு உரியதாயிற்று. இதில் ஏழாவது ஷரத்து ஒரு லக்ஷம் வராக்னும், அமர்சிங்குக்குக் கொடுக்கும் தொகையும் வசூல் செய்வதற்குரிய - --- 24, 3.296 முதல் 800 வரை 25. 6-195, 196 * Schwartz 26. P. 105 - K. Rajayyan 27. 3-223