பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

வேண்டும் எனின் முதலில் தஞ்சையில் உள்ள கம்பெனியின் பிரதிநிதியிடம் வழக்குக் கூறினால், அவர் அரசரிடம் முறையிடுவார். அரசர் உடனே அவ் வழக்கைத் தம்முடைய நீதிமன்றத்தில் விசாரிக்கச் செய்வார்." 12ஆவது ஷரத்தில் உள்ள மேற்குறித்த பகுதி சரிவரக் கடைபிடிக்காத காலத்தில் சர்க்காரிலிருந்து சுட்டிக்காட்டித் தம் உரிமையை நிலைநாட்டி யுள்ளனர் என்பது பின்வரும் சான்றுகளால் அறியப்பெறும் : " 9-6-1828 சர்க்கார் இலாகாவின் ஜனங்களின்பேரில் வாரண்டு அனுப்புவது உடன்படிக்கைக்கு விரோதம் ஆகும்" " 1828 ரெஸிடெண்டுக்கு ஸர்கேல் எழுதியது : திருவையாற்றில் ஸ்ர்க்காரின் நிலத்தை அளந்துகொண்டிருக்கும் ஐந்து ஆசாமிகளைப் போலிஸார் பலாத்காரமாகத் தாசில்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் ஜெயிலில் போட்டு இருக்கிறார்கள். இது உடன்படிக்கைக்கு விரோதமான செயல்." இங்ங்ணம் கிழக்கிந்தியக் கம்பெனியார் மராட்டிய மன்னர்களிடம் அமயம் வாய்ப்புழியெல்லாம் உடன் படிக்கைகள் செய்துகொண்டு, மன்னர்களுடைய அதிகாரவரம்பையும் ஆட்சியுரிமையையும் சிறிது சிறிதாகக் குறைத்துத் தம்மிடமிருந்து வருவாயுள் ஒரு பகுதியைப் பெறும் நிலையில் அமைத்துத் தாமே உண்மையான ஆட்சியாளர் ஆயினர். 31. Article 12: “.........Any complaint against the Rajah's relations, immediate servants, or others residing in the sort of Tanjore by persons of a different description shall in the first instance be made to the Company’s representative at Tanjore who shall refer it to His Excellency. The Rajah hereby engages to order an immediate investigation to be made in his Court of Justice......... 32. 1–264 33, 2–56