பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவில் வாணிபம் செய்து பொருளிட்டவந்த ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் தென்னாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட்டனர்; வெற்றியும் கண்டனர். தஞ்சை அரசில் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் முதன் முதலாகத் தலையிட்டது1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாயசிங்கர் காலத்திலாகும். பிரெஞ்சுக்காரர் காரைக்கால் பெற்றமை பிரதாபசிங்கர் ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் தஞ்சை உள்நாட்டு விவகாரத்தில் நுழைய இடமேற்பட்டது. சந்தா சாகிபைச் சதாரா அரசரது சேனைத் தலைவர் முராரி ராவ் சிறைப்படுத்திக் கொண்டு போய்விட்டார். சந்தாசாகிபை விடுவித்து வந்தால் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்று கருதிய பிரெஞ்சு கவர்னர் டுப்ளேயின் சூழ்ச்சியின்படி கி. பி. 1748இல் 7 லக்ஷம் ரூபா கொடுத்துச் சந்தாசாகிப் விடுவிக்கப்பட்டார். சந்தாசாகிப்,அன்வாருத்தீனை ஆம்பூரில் 1749இல் தோல்வி யுறச்செய்தார். அவருடைய மகன் முகம்மதுஅலி திருச்சிக்கு ஓடிவிட்டார். பிறகு ஆர்க்காட்டுக்குச் சென்று அங்கு நவாப் ஆகப் பிரகடனம் செய்யப்பெற்றார். டுப்ளே திருச்சியின் மேல் படை எடுக்குமாறு சந்தாசாகேபைத் தூண்டினார். அவரும் 28-10-1749இல் பெரும்படையுடன் திருச்சிநோக்கிச் சென்றார். 12-12-1749இல் இப்படைகொள்ளிடத்தைக் கடந்து தஞ்சையை அடைந்து முற்றுகையிட்டது; கப்பம் செலுத்துமாறும், அப்படையெடுப்புச் செலவு தருமாறும் கேட்டது. இப்படையை எதிர்க்க முடியாது என்பதை அறிந்த பிரதாபசிங்கர் விரைவில் கப்பம் செலுத்துவதாக உறுதி கூறினார்; ஆங்கிலேயருடைய உதவி யையும் நாடினார். பிரதாபசிங்கருடைய சூழ்ச்சியை அறிந்த சந்தாசாகேபு