பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 கோட்டையைத் தாக்குமாறு ஆணையிட்டார். பிரெஞ்சுப் படை இப்போரில் கோட்டையின் ஒருவாயிலைப் பற்றியது. அரசர் அஞ்சினார் ; சமாதானம் செய்து கொண்டார்; சந்தாசாகிபுக்கு 7 லகூடிம் ரூபா கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்; பிரஞ்சுக்காரருக்கு எண்பத்தோரூர்களை அளித்தார்; செலுத்தவேண்டிய கப்பமும் நீக்கினார்.1 இதனை, - 1 . "1749 ராஜபூரீ பிரதாபசிங்ஜி ராஜா காலத்தில் நவாப் ஹ-சேன் தோஸ்துகான் பகதூர்' அவர்கள் தஞ்சாவூர் சமீபம் வந்து இறங் கினதும் அவர்களுடைய சர்தார்களும் வந்து சமாதானம் செய்து கொண்டதற்காகக் கொடுத்த கிராமங்கள் 81 தவிரவும் அவர்கள் இடம் இருந்து வரவேண்டிய கப்பம் 2000 வராகன் தள்ளுபடி செய்யப்பட்டது ' என்ற மோடி தமிழாக்கக் குறிப்பு வலியுறுத்தும். இக்குறிப்பில் 1749 என்று உள்ளமையும் நோக்கத்தக்கது. இங்ங்னம் பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால் பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக்கொண்டனர். ஆங்கிலேயர் தேவிக்கோட்டை பெற்றமை - ராஜா துக்கோஜி என்பவர் ஏகோஜியின் மூன்றாவது மகன் ஆவர் இவர் 1736 முதல் 1739 வரை ஆட்சி செய்தவர். இவர் தன் தமையன் முதலாம் சரபோஜி ஆட்சிக்காலத்திலேயே 'தன் மூத்த சகோதரரிடம் இருந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியை அடைந்து, குடும்பத்தோடு மகாதேவ பட்டணத்தில் இருந்து வந்தார். இவருக்குப் பட்டத்தரசிகள் மூவர் இருந்தனர். இரண்டாவதான அபரூபாபாயி என்பாள் பொய்யாகக் கருவுற்றதாகக் கூறிக் குழந்தை பிறந்ததாகவும் சொல்லப்பட்டது. அக்குழந்தைக்கு ஸவாயி ஷஹாஜி என்றும் பெயர் சூட்டப்பெற்றது. ஆனால் உண்மையறிந்ததும் அவனைத் தகுந்தபடி ' பரிஹாரம் ' செய்துவிட்டனர். ' துக்கோஜிக்கு 5 மக்கள் இருந்தனர்; பாபாசாஹேப், ச்ையாஜி, அண்ணா சாஹேப், நானாசாஹேப், பிரதாபசிங்கு என்பவர் ஆவர். அண்ணாசாஹேபும் நானாசாஹேபும் துக்கோஜிக்கு முன்னரே இறந்தனர். துக்கோஜி இறந்ததும் பாபாசாஹேப் அரசரானார். அவர் சில மாதங்களே ஆட்சிபுரிந்தார். அவர்க்குப் பின் அவர் மனைவி சுஜான்பாயி அரசு கட்டிலேறினார். சுஜான்பாயி அரசாட்சி செய்யும்பொழுது உறவினர்களுள் ஒருவரான கெளமாஜி காண்டகே என்பவர் மேலேகூறிய ஸவாயி ஷாஹஜி என்பவர் இப்பொழுது பிழைத்துள்ளார் என்று 1. Pages 255—259, Maratha Rule in the Carnatic, Srinivasan, c. k. 1 அ. கர்னாடகத்தின் நவாபு தோஸ்து அலிகானின் மருமகன் சந்தாசாகேப் மற்றொரு 1005unsor on-G&sir Gorgiosmos - Pages 251 & 252, Maratha Rule in the Carnatic. 2. ச. ம. மோ. த. 9-8 3. போன்ஸ்லே வம்ச சரித்திரம், பக்கம் 8B B