பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 என்றுள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு தேவிக்கோட்டைக்காக 5500 வராகன் ஆங்கிலேயர் தஞ்சை மராட்டிய மன்னருக்கு அளித்தனர் என்று தோன்றுகிறது.’க பல்வேறு ஒப்பந்தங்கள் ஆங்கிலேயருடன் தஞ்சை மராட்டிய மன்னர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றிக் "கும்பினியுடன் ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் (6) விரி வாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் தஞ்சை அரசர்கள் தம் சுய உரிமையை இத்தல், படைக்குறைப்பு, பின்னர் ஆங்கிலேயப் படைகளைத் தஞ்சையில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்புக்காகப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்காலும் ஆங்கிலேயர் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக்கொள்கை ஆங்கிலேயர் சொற்படியே அமைத்துக்கொள்ளுதல், ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைஞர்க்கும் இவர் களும் நண்பரும் பகைஞருமாதல் ஆகிய கட்டுப்பாடுகட்கிடையே அகப்பட லாயினர். நேரிடையாகவோ மறைமுகமாகவோ இங்ங்ணம் ஆங்கிலேயர்கட்கு அடங்கி அவர்வழி ஒழுக வேண்டிவந்தது. தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் வரிவசூல் வேலை ஆங்கிலேயர்கட்கு அவ்வப்பொழுது கிடைத்தது, ஆங்கிலேயர் பலர் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டனர். படைக்குறைப்பும், படையின்மையும் ஏற்பட்ட காலத்தில் ஆங்கிலப் படைஞர் தஞ்சையில் தங்குவாராயினர். ஆங்கிலேய அரசாங்க நிர்வாகப் பிரதிநிதியாக " இர ஸிடெண்டு ' ஒருவர் நியமிக்கப் பட்டார். இரண்டாம் சரபோஜி செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் வரிவசூல் உரிமை முழுமையும் ஆங்கிலேயர்க்குரியதாயிற்று அரசரும் ஓய்வூதியம் பெறும் நிலையை அடைந்தார். அப்பொழுது மராட்டியர் நேர்பார்வையில் தஞ்சை நகரப்பகுதி மட்டும் இருந்தது. அங்கு மட்டுமே நீதி நிர்வாகம் செலுத்தினர். தஞ்சை நகரத்துக்குப் புறம்பேயுள்ள பகுதி முழுவதும் ஆங்கிலேயரின் நேரிடை ஆட்சிக்குள்ளாயிற்று. -- ஆகவே சிறிது சிறிதாக நிர்வாகம் கைப்பற்றும் நிலையிலும் முழுமை யாக ஆட்சியைக் கைப்பற்றியபிறகும் பல ஆங்கிலேயர்கள் கும்பினியின் சர்ர்பில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கலாயினர். இத்தகைய காலகட்டத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் பற்றிய குறிப்புக்கள் மோடி ஆவணங்களில் காணப்படுகின்றன. அவற்றால் அறியப்பெறும் செய்திகளும் மிகச்சிலவே, எனினும் அவர்களை நான்கு பிரிவினராகப் பிரிக்கலாம்: - 73. It is hoped that he (the King of Tanjore ) has been brought to relinquish the Devikottai tribute of 1100 pagodas-P. 433, The Madras DespatchesCalendar for 1764-65,