பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o V இங்ங்னம் மேலே குறிப்பிட்ட வண்ணம் பெற்றுள்ள 13 கைய்ெ ழுத்துப் பிரதிகளில் கண்ட செய்திகளும், மேலே 48 சுவடிகளில் உள்ள செய்திகளில் பெரும்பாலனவும், அடைவு அட்டைகளில் குறிக்கப்பெற்றுப் பல தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தப் பெற்று 34 தலைப்புக்களில் இந்நூல் எழுதப்படலாயிற்று. அணுகிய முறை மேற்கூறிய மோடி ஆவணத் தமிழாக்கத்துள் க ண் ட செய்திகளே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் செய்திகள் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றுள்ளன. வரலாற்றாசிரியர்கள் பிற ஆதாரங்களைக் கொண்டு எழுதிய செய்திகள் பல இருப்பினும் அவை நமக்குக் கிடைத்துள்ள மோடி தமிழாக்கத்தில் இடம் பெறவில்லையெனில் அவை பெரும்பாலும், இந்நூலில் இடம் பெறவில்லை என்னலாம். தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள எல்லா ஆவணங்களும், சென்னை ஆவணக்காப்பகத்தில் உள்ள மோடி ஆவணங்களும், திருப்பதி அருங்காட்சி யகத்தில் உள்ள மோடி ஆவணங்களும் மொழிபெயர்க்கப்பெறின் மேலும் பலப்பல செய்திகள் கிடைக்கக்கூடும். அடிக்குறிப்புக்கள் அடிக்குறிப்பாக 3-171, 6-325 என்று இன்னோரன்னவாறு கொடுக்கப் பட்டிருப்பின் நம்மிடம் இங்கு உள்ள கையெழுத்துப் பிரதி எண் 3இல் பக்கம் 171இலும், கையொழுத்துப்பிரதி 6இல் பக்கம் 325இலும் அச்செய்திகள். இடம் பெற்றிருக்கின்றன என்றும், ச. ம. மோ. த. 31-24 என்று இருப்பின் சரஸ்வதி மகாலில் உள்ள 48மோடித் தமிழாக்கச்சுவடிகளில் 31ஆவது சுவடியில், 24ஆவது பக்கத்தில் அச்செய்தி காணப்படும் என்றும் இந்நூலைப் படிப் பவர்கள் அறியவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் செய்யவேண்டிய பணி சரஸ்வதி மகாலில் உள்ள 11 கையெழுத்துப் பிரதிகளில் மோடியில் உள்ள சிலவற்றை மராட்டிய மொழியில் பெயர்த்து எழுதியிருப்பினும் பல இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. அவற்றை மொழிபெயர்க்கவேண்டியது இன்றியமையாத செயலாகும். Agjou?si, 51605RT soldsårsp;#35'sb ( Subordinate Judge's Court ) 1912க்குரிய 26ஆம் எண் அசல்வழக்கு நடந்ததாகத் தெரிகிறது. அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது, முதலிரண்டு பிரதிவாதி கட்கு முதல் சாட்சி ஆகிய திரு. எம். எஸ். கண்டிகை (M. S. Ghantigai) என்பவர் அந்த வழக்குக்குத் தொடர்புடைய பல ஆவணங்களை மொழி பெயர்த்துள்ளதாகத் தம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் (பக்கம் 10, வரி29).