பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, 63 5. ஸ்ர் தாமஸ் மன்ரோ இவர் 10-6-1820 முதல் 6-7-1827 வரை கவர்னர் ஆக இருந்தவர் ; நிலச் சீர்திருத்தத்தில் தலைசிறந்தவர். இவர் 6-8-1826க்குரிய மோடி ஆவணத்தில்,"

  • The Right Hon’ble Major General Sir Thomas Munro K. C. B. Baronet”

என்று குறிக்கப்பெற்றுள்ளார். இவர் 6-8-1826இல் தஞ்சைக்கு வந்தார். மன்ரோவை ஸர்கேலும் மஜூம்தாரும் எதிர்கொண்டழைக்கச் சென்றனர். லர்கேல் ராமோஜி ஸ்ர்ஜேராவ் முதலியவர்கள் எடுபிடிகள் பல்லக்கு குதிரை முதலியவற்றுடன் விடியற்காலையே ஸந்த்யா மண்டபத்தில் காத்திருந்தனர். காலை 10 மணிக்குக் கவர்னர் வந்தார். முன்னதாகவே எதிர்கரைக்குச் சென்றிருந்த ரெஸிடெண்ட் முதலியவர்கள் கவர்னருடன் வந்தனர். ஜெய வாசலுக்கு வடகிழக்கில் அண்ணாஜி தியாகராஜரும் தென்னண்டை ஜிவாஜி நாராயணும் வரவேற்றனர். ஜெயவாசலுக்கு வந்ததும் 19 குண்டுகள் போடப்பட்டன. கோட்டைக்குத் தெற்கில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் கவர்னர் வந்து தங்கினார். பின்னர் இரண்டாம் சரபோஜி, இளவரசர், மூன்று மாப்பிள்ளைகள், இன்னும் பலருடன் கவர்னரைப் பார்க்கச் சென்றார்; துருப்புக்கள் செய்த மரியாதையை ஏற்றுக் கவர்னருடன் சிறிதுநேரம் பேசிவிட்டுத் திரும்பினார். கவர்னருடன் வந்தவர்களுக்கு இரண்டு குதிரை களும் ஒரு யானையும் பரிசிலாக அளிக்கப்பெற்றன." 6. வாஷிங்க்டன் இவர் கி. பி. 1829இல் ஹாஜரைப் பார்க்க வந்ததாக ஒரு ஆவணக்குறிப்புக் கூறுகிறது. ஆளுல் 1827 முதல் 1882 வரை கவர்னராக இருந்தவர் ஸ்டீஃபன் ரம்போல்டு வாஷிங்டன் ஆவர். 3. ரெஸிடெண்டுகள் இவர்கள் கும்பினியாரின் பிரதிநிதிகளாகத் தஞ்சை முதலிய சிற்றரசர் களின் தலைநகர்களில் அச்சிற்றசர்களை மேற்பார்வை செய்யும் அரசியல் தந்திரிகளாக விளங்கியவர் ஆவர். தஞ்சையில் முதன் முதலில் அப்பொறுப் பேற்றவர் யார் என்பது உறுதியாகக் கூற இயலவில்லை. 1. ஜேம்ஸ் ஸ்டுவர்ட் : லார்டு பிகட் இரண்டாவது தடவை கவர்னர் ஆக வந்து, துளஜாவுக்கு அரசளித்துக் கும்பினியாருக்குத் தஞ்சையில் வலிமை யான இருப்பைத் தேடித்தந்த பொழுது அவருடைய ஆட்சிக்குழுவில் அவர்க்குச் சிலர் ஒத்துழைக்கத் தவறினர் : எதிர்ப்பும் தெரிவித்தனர் : சுயநலத்தில் திளைத்தனர்; இவர் கருத்துக்கு மாறாக ஜியார்ஜ் ஸ்ட்ராட்டன் ( George 18. 3-182 19. 8-182 முதல் 192 முடிய 20, 4–488 21. ச. ம. மோ. த. 4-15 22. List of Governors of Madras, S. No. 56, History of Tamil Nad, N. Subra manian.