பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இரவில் மக்லோட் ஒரு கும்பனி சோல்ஜரையும் ஆபீஸ்ரையும் 8 மணிக்குக் கீழவாயிலில் வைத்துத்தான் இராஜாவின் "பேட்டி' வாங்கி ரொம்ப புத்திமதிகளைச் சொல்லிச் சிவராயருக்காக இராஜ்ஜியத்தை இழக்காதீர்கள் (என்று கூறினார்)......(அதற்கு அமர்சிங்கு) ' ராயரை ஒப்புவிக்கிறதில்லை என்ன ஆனாலும் ஆகட்டும் ' (என்று கூறினார்). நாளைக்கு எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்று மக்லோட் சோல்ஜரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனார்......". இதனால் அமர்சிங்கைத் தமக்கு அடங்கியிருக்குமாறு செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளையெல்லாம் மக்லோட் மேற்கொண்டார் என்பது தெரியவரும். மக்லோட் ரெஸிடெண்டாக 1797 வரையில் குறிக்கப் பெறுகிறார்". 3. ராம்" (G. H. Ram): மக்லோட் 1797 வரையில் குறிக்கப்பெற்ற போதிலும் 1-1-1792இல் மிஸ்தர் ராம் ஒரு ஆவணத்தில் குறிக்கப் பெறுகிறார்."அ இவருக்கு மூன்று சுபாக்கள் தருவதாகச் சென்னைக் குழுவில் தீர்மானித்தனர்.கே அமர்சிங்கு காலத்தில் இவர் ரெஸிடெண்டாக இருந்தார்."இ சரபோஜி முதலியவர்களுக்குச் செலவுகட்காக ராம் வழி 50,000 வராகன் தர வேண்டும் என்று எழுதப்பெற்றுள்ளது." மேஸ்தர் ராம் தங்கியிருந்த வீடு வடக்குத் தெருவில் இருந்தது." 4. பென்ஜமின் டுரின் (Benjamin Torin). இவர் கி. பி. 1798 முதல் தஞ்சையில் ரெஸிடெண்ட் ஆக இருந்தார் என்பது, "1199; மிஸ்தர் டுரியன் துரைக்குச் சாமான்களுக்காகச் சக்கரம் 20-4;" என்ற ஆவணக்குறிப்பால் அறியப்பெறும். (சுஹர்சன் 11.99 என்பது கி. பி. 1798 ஆகும்). 1798 மேஸ்தர் டுரியன் வீட்டு வேலைக்குக் கீத்து மூங்கில்" என்ற குறிப்பும் இதற்குச் சான்று.” இவரும் சார்லஸ் ஹாரீஸ், ஜியார்ஜ் ஸ்ட்ராட்டன் ஆகியோரும் ஆக மூவர் தஞ்சையின் ஆட்சிநிலையும் மக்கள் வாழ்க்கை நிலையும் பற்றி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சென்னைக் கவர்னர் குழுவால் நியமிக்கப்பெற்றனர். இக்குழு தம் கருத்துக்களைக் கூறியதும் தஞ்சையைத் தமக்குரியதாக ஆக்குவதற்குரிய முயற்சிகளை 29. 2-114, 115 ; 7-596 முதல் 599 வரை (கும்பினியுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் இதன் அடிக்குறிப்பு 21க்குரியதில் காண்க) 30, 2-308; 4–385, 7–687 30.அ. 4.390 30ஆ. 4-398 303. P. 90, A History of British Diplomacy in Tanjore, K. Rajayyan 30-, 5-450 30.உ. 10-47 31. 4-285 32. ச. ம. மோ. த. 15-31 பக்கம் 181, போன்ஸ்லே வமிச சரித்திரம் - தமிழ் - ஸரஸ்வதி மகால் வெளியீடு (1980) 다.