பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மேற்கொள்ளுமாறு ரெஸிடெண்ட் டுரினுக்குச் சென்னையினின்று ஆணை வந்தது. அதன்படி அவர் முயற்சி செய்து வென்றார். ரெஸிடெண்டுக்குச் சம்பளம் மராட்டிய அரசரே கொடுத்தனர். டுரினுக் குச் சம்பளம் 1000 பவுண்டு அதாவது புலிவராகன் 3157 என்று கணக்கிடப் பட்டது. இதனை "மிஸ்தர் டுரியன் சாயேபுக்கு 1811 ஜனவரி மாதத்திற்குச் சேரவேண்டிய 1000 பவுண்டுக்கு மிஸ்தரானவர் சீமையில் ஒரு வியாபாரி மூலம் 1000 பவுண்டு வாங்கி அதற்குச் சென்னைப்பட்டனத்தில் மிஸ்தர் அடத்ரன் டிபாரிஸ் அண்கோவுக்கு 1000 பவுண்டு செலுத்துவதற்காகப் பில் அனுப்பிய வகையில் புலிவராகன் 3157, மைலி 3, காசு 46 " என்ற ஆவணக்குறிப்பு வலியுறுத்தும். 24-4-1821இல் கயையினின்றும்', 2-9-1822இல் காஞ்சிபுரத்தி னின்றும் இரண்டாம் சரபோஜி எழுதிய கடிதங்களினின்று " டுரியன்' அவ் வாண்டுகளில் இலண்டனுக்குச் சென்றுவிட்டார் என்று அறியவருகிறது. 5. வில்லியம் பிளாக்பர்ன் (William Blackburn) : மோடி ஆவணங் களில் இவரைப்பற்றி 1814இலிருந்து தெரியவருகிறது. 30-6-1818இல் " சின்ன மகாராஜா ( இரண்டாம் சிவாஜி ) கல்யாணத்துக்காக வருகிற சர்தார்களுக்கு மரியாதை செய்கிற விவரத்துக்கு ரிசிடெண்டு பிளாக் பர்ன் சாயபுக்கு " ஒரு குறிப்பு அனுப்பியதாகத் தெரிகிறது." அாசரைப் பார்ப் பதற்கு ஒரு சமயம் பிளாக்பர்ன் மலையாளம் கலெக்டர் மக்லோட் என்பவருடன் வந்தார்." 6. ஜான் ஃபைஃப் ( John Fyfe ) : ஜான் ஃபைஃப் பற்றி 1824 முதல் 1838 வரை குறிப்புக்கள் காணப்பெறுகின்றன. காப்டன் ஜான் ஃபைஃப் அவர்களுடைய பங்களா 1824இல் பழுதுபார்க்கப்பெற்றது." கி. பி. 1825இல் முத்தாம்பாபுரம் சத்திரத்துக்கு இவர் சென்றுள்ளார் ; அங்கு ஐந்து பள்ளிக்கூடங்களைப் பார்வையிட்டார் ; ஒவ்வொரு வகுப்பிலும் ஓரிரு மாணாக்கர்களைப் பரீகூகித்துப் பார்த்தார். அவரிடம் சத்திரத்தைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பெற்றன. பிற நிர்வாகச் செய்திகளையறிந்து அங்கிருந்து புறப்பட்டார்-என்று ஒரு ஆவணம் பகர்கிறது." கி. பி. 1826இல் இவர் சேதுபாவா சமுத்திரம் என்ற ஊருக்குச் சென்றுவந்தார். 8-7-1826இல் இவர் தம்பி இன்ஸைன் ஃபைஃப் என்பவர் தஞ்சைக்கு வந்தார்." 1827இல் மீண்டும் ரெஸிடெண்ட் இருக்கும் வீடு பழுதுபார்க்கப்பட்டது , செலவு ரூ. 1003, மைலி பணம் 4, காசு 53 என்று ஆவணக்குறிப்பு உள்ளது.* 33. P. 108, A History of British Diplomacy in Tanjore, K. Rajayyan so34, 5-85 35, 5–27 36. 4-291 ; ச. ம. மோ. த. 2-18 37. 6-329 38. ச. ம. மோ. க. 7-1 39, 4-16 40. 2-241 முதல் 248 முடிய 41. 4-482 42. 3-181 43, 4-214.