பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 '7-11-1830 ரெஸிடெண்டு ஃபைஃப் சாயேப் கப்பலேறிப் போக வில்லை என்று கலெக்டர் சொன்னார் என்று ஸர்கேலுக்கு சிரஸ்தேதார்" என்ற குறிப்பால்' கி. பி. 1830 வரையில் இவர் ரெஸிடெண்டாக இருந்தார் என்று தெரிகிறது. == 7 ஜே. பிளாக்பர்ன் : இரண்டாம் சரபோஜி மன்னர் 8-3-1832இல் கைலாசவாசியானார் (இறந்தார்) அச்செய்தியைச் சென்னைக் கவர்னருக்கு எழுதியவர் ஜே. பிளாக்பர்ன் என்பவர் ஆவர். இவர் ஆக்டிங் ரெஸிடெண்ட் ஆக இருந்தார் என்று அறியவருகிறது. மேலும் அந்தக் கடிதத்தினின்று சரபோஜி இறந்த பிறகு ரெஸிடெண்டு பதவி நீக்கப்படும் என்று 12-1-1831இல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் அப்பதவி நீட்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது." - 8. கிண்டர்ஸ்லி : இவர் ரெஸிடெண்டாக 1842இல் பல ஆவணங் களில் குறிக்கப் பெறுகிறார். 6-3-1837 முதல் 24-9-1842 வரை சென்னைக் கவர்னராக இருந்தவர் லார்டு எல்பின்ஸ்டன் (Lord Elphinston) என்பவர் ஆவர்." இவருக்குக் கும்பகோணம் சபாபதியாபிள்ளை என்பவர் 10-8-1842இல் ஒரு பிராது கொடுத்தார். அதில் கிண்டர்சலி துரை தன் கருத்தை எழுதிக் கவர்னருக்குப் பணிந்தனுப்பியுள்ளார். 31-8-1842இல் சிலம்பாயி என்பாள் ஒரு பிராது கொடுத்திருக்கிறாள். 9-8-1842இல் சிதம்பரம்பிள்ளை என்பாருடைய பிராதிலும்" இந்த ரெஸிடெண்டு குறிக்கப் பெறுகிறார். 9. மங்கமாரி: 22-8-1846இல் ரெஸிடெண்டு மங்கமாரி கோடிக் கரைக்குச் சென்றபொழுது ஸர்க்காரின் தோட்டத்தைப் பார்வையிட்டார் என்று ஓராவணம் கூறுகிறது." இக்காலத்தில் தஞ்சைக் கலெக்டராக இருந்தவர் பெயரும் மங்கமாரி என்று தெரிகிறது." 10. பரட்டுதுரை : இவர் தஞ்சாவூரில் "ஆகபடியின்அ. (acting) ரெஸிடெண்டு ஆக 1849இல் இருந்தவர் ஆவர். சுப்பிரமணிய சாத்திரி என்று ஒருவர், அரண்மனையில் சிறிய அலுவலில் இருந்தார். வாசுதேவகவி என்பவர் " ஜபசாலை" ஒன்று நிறுவிச் சில பிராமணர்களைத் துன்புறுத்தி இடையறாது ஜபம் செய்யச் செய்து, காளி சிலையைச் செய்துவைத்து ஒரு பெண்ணைப் பலியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று அச்சுப்பிரமணிய சாத்திரி 44. 2–106 45. P. 25, Saraswathi Mahal by R. Jayaraman (1981) 46, List of Governors of Madras, No. 60 47, 6–388,889 48, 6-864, 865 49. 6-378 50. 4–297 51. 8-81: 5-211 51.அ. ஆகபடியின் = ஆக்ட்டியின் = ஆக்டிங்