பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 1859 நவம்பர் மாசத்திய கணக்குகள் பற்றியும் கமிஷனர் ஃபிலிப்ஸ் இடம் இருந்த சாமான்கள் விவரம் பற்றியும் ஒராவணம் குறிப்பிடுகிறது." 14. எம். கேடல் : இவர் தஞ்சாவூர் கவர்ன்மெண்டு ஏஜெண்டாகக் குறிக்கப் பெறுகிருர். 27-7-1859இல் சென்னை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தஞ்சையில் அரசாங்க " ஏஜெண்டு " ஆகக் கலெக்டர் நியமிக்கப் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இப்பதவி வகித்ததாகக் கேடல் என்பார் 27-9-1860இல் குறிக்கப்பெறுகிறார்." மங்களவிலாஸ் மாதர்களின் நகை களைப் பங்குபோடும் விஷயமாகப் பிறருக்கு எச்சரிக்கை தருபவராக வேறு ஒரு ஆவணத்தில் குறிக்கப்பெற்றுள்ளார். இதனால் அரண்மனை விவகாரங்கள் எல்லாமும் அரசாங்க ஏஜெண்டு வழியே நடைபெற்றனவாதல் வேண்டும் என்று அறியப்பெறும். 4. பிற அலுவலர்கள் இத்தலைப்பின் கீழ் ஆங்கிலேயச் சேனைத் தலைவர்கள், மாவட்டக் கலெக்டர்கள் முதலியவர்கள் அடங்குவர். - 12-6-1785இல் ஜெனரல் ஸர்ஜான்துலிங்கு என்பவர் அப்பதவியேற்று வந்ததும் துளஜா மகாராஜா அவருக்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்." துளஜா காலத்திலேயே தஞ்சையில் கர்னல் ஈஸ்டெண்டு என்பவர் இருந்தார். மிஸ்தர் அட்லிஸ்டர் என்று ஒருவரும் 1785இல் குறிக்கப் பெறுகிறார்." 30-12-1821, 14-1-1822 ஆகிய தேதிகளில் இரண்டாம் சரபோஜி யின் காசியாத்திரையின்போது, காப்டன் மைக்கேலுக்கு ரூ. 4000 தருமாறு தஞ்சை சர்க்கேலுக்கு முகாம் சர்க்கேல் எழுதியுள்ளார்.: காப்டன் ஜான்காமெல் இங்கிலாந்துக்குப் போகும்பொழுது ரூ. 4009 கொடுக்குமாறு நிர்மள் என்ற தங்குமிடத்திலிருந்து இரண்டாம் சரபோஜி 4-2-1822இல் ஆணை பிறப்பித்துள்ளார்.ாக --- 18-12-1824இல் கலெக்டர் காடன், உதவி கலெக்டர் பிளாக்பர்ன் ஆகியோர் இருவரும் ஸர்க்காரில் "எத்தனை நியாய சபைகள் இருக்கின்றன . அவைகளின் வேலைகள் என்ன?" முதலாகிய செய்திகளைக் கேட்டறிந்தனர் என்று தெரிகிறது. 7-6-1827இல் ஏ. டி. காமல் என்பார் கலெக்டராக --- 69. ச. ம. மோ. க. 10-9 * Supreme Court, 70. 6-327 71. 6–236 72. 5–323 . 73. A 2–9, 10 . 74, 5-22, 107 75, 5–25 76. 2-205, 206