பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 7 இருந்தார்." 23-12-1829இல் நெல்சன் என்பவர் கலெக்டராகக் காணப் படுகிறார். இவர் விலங்குகளைக் காப்பாற்றுதல் பேணுதல் ஆகியவற்றில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை, 'மிருக சம்ரகூடிணம் செய்து நன்கு பராமரிக்கும் வகையில் கொழுத்த பிராணி என்று காண்பிக்கும் மிருக சம்ரக்ஷகனுக்கு இனாம் கொடுப்பது ' என்ற பகுதி மெய்ப்பிக்கும். 18-3-188റ്റുള്ള மிஸ்தர் கிண்டர்ஸ்லி என்பவர் கலெக்டர் ஆக இருந்தார்." இக்கலெக்டருக்கு 29-10-1831இல் கோனோட்டி நாயக்கர் ஒரு கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிகிறது." 曹 கி. பி. 1845இல் கலெக்டராக இருந்தவர் மங்கமாரி ஆவர்." 9-12-1845இல் காலை 11 மணிக்குத் திருச்சி மேஜர் ஜெனரல் கீப்ஸன் ஹாஜாரைக் காண வந்கார்." 1-11-1847இல் ரெஸிடெண்டு ஜே. எச். பிஷப் அவர்கள் சர்க்கேலுக்கு எழுதிய கடிதத்தில்" சில வழக்குகளின் வரலாறு தெரியவேண்டுமென்று சர். எச். சி. மகமாரி ஃப்ரானடே கேட்டிருப்பதாக எழுதியுள்ளார் என்று காணப் படுகிறது. இவர் உச்சமன்ற நீதிபதியாகலாம் என்று தோன்றுகிறது. தத்தாஜி அப்பா அவர்களுக்கு வெங்காஜி என்ற அலுவலர் எழுதிய கடிதம் சரபோஜியை ஆட்சிக்குக் கொணரும் முயற்சிகளைப் பற்றியதாகும். அக்கடிதத்தில் மிஸ்தர் ராம், லார்டு வாலிஸ், ஜெனரல் மெட்ராஸி, மிஸ்டர் டார்க்கு, கர்னல் பிளாயிட், செரி, போஸர் முதலிய ஆங்கிலேயர் பெயர்கள் குறிக்கப்படுகின்றன." = 22-11-1856இல் ஜான் புரூஸ் நார்ட்டன் என்பார் அரண்மனைக்கு வந்து வக்காலத்து வாங்கிச் சென்னை உச்சநீதி மன்றத்தில் (Supreme Court) பிராது செய்தார். பிரமாணம் செய்யும்பொழுது துளசியும் உப்பும் கையில் கொடுத்து பாயி சாகேப் இடத்தில் பிரமாணம் வாங்கப் பெற்றது" என்று முன்னரே கூறப்பட்டது. ஸ்வார்ஷ் பாதிரியார் (Frederick Schwartz) இவர் ஒரு ஜெர்மனி பாதிரியார். இவர் தரங்கம்பாடியில் 11 ஆண்டுகள் இருந்தார்; பின்னர்த் திருச்சியில் இருந்தார். கி. பி. 1769இல் இவர் தஞ்சைக்கு வந்தார் ; தம் 77. 3-62 78. ச. ம. மோ. த. 18-21 79, 2-103 80. 7–781 81. 5-211; 8-81 82. 5-214 83. 4-277 84. 5-553, 554 85. 8-129 : அடிக்குறிப்பு 61 காண்க