பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சமயப் பணியைச் செய்தார் , துளஜாவுக்கு நண்பர் ஆனார். இவர் பாரசீகம் உருது மராத்தி முதலிய மொழிகளில் வல்லவர். கும்பினியாரிடத்தே இவருக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது. துளஜா கி. பி. 1787இல் சரபோஜியைச் சுவீகாரம் எடுத்துக்கொண்ட பிறகு சரபோஜியை இவருடைய ஆதரவில் இருக்கச் செய்தார். அமர்சிங்கு அரசைத் தனக்கு உரியதாக ஆக்கிக்கொண்டதும் சென்னை அரசாங்கத்துடன் வாதாடிச் சரபோஜியே பட்டத்துக்கு உரியவர் என்பதை இவர் நிறுவச்செய்தார். சரபோஜி பட்டம் பெற்றதை இவர்தம் கண்ணால் காணவில்லை. சரபோஜிக்கு ஸ்வார்ஷ் பாதிரியிடத்தில் அன்பும், மரியாதையும், நன்றியறிவும் மிகுதியும் உண்டு. ஸ்வார்ஷ் பாதிரியார் சரபோஜியை அரசு கிட்டிலில் அமர்த்தச் செய்ய வேண்டிய முயற்சிகளை யெல்லாம் எடுத்தார். பல தடவைகள் தஞ்சையிலேயே தங்கியிருந்தார். அமர்சிங்கு பக்கம் கூறிய 12 பண்டிதர்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டபொழுது ஸ்வார்ஷ் தஞ்சையிலேயே இருந்தார். இவரிடமே சில பண்டிதர்கள் தம் வருத்தத்தைத் தெரிவித்தனர். சரபோஜி தஞ்சைக்குப் புறப்பட்டு வருகிறார் என்ற செய்தியையும் ஸ்வார்ஷ் தெரிவித்தார் என்று மோடி ஆவணக் குறிப்புக்கள் உள. ஸ்வார்ஷ் 18-2-1798இல் இறந்தார். இதுகாறும் கூறியவற்றால் துளஜா காலத்திலிருந்து தஞ்சையில் வெள்ளையர் ஆதிக்கம் படிப்படியாக மிகுந்தது என்றும், பல துறைகளிலும் பெரிய அலுவலராகித் தஞ்சைச் செல்வத்தைத் தாம் ஈட்டுவதற்குப் பல வழிகளை உண்டாக்கிக் கொண்டனர் என்றும் தெளிவாக அறியலாம். == 86. 3-6, 11, 14, 28, 80, 32, 297, 800 ; 7–595.