பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஹர்காரா" என்பது ஒற்றரைக் குறிக்கும் என்பர். பிறிதொருவர், வழக்குமன்றங்களில் வருகைப் பதிவேடு வைத்திருப்பவர் என்பர். இவர் "அரிகர்" (Arikars) என்பவரே ஒற்றர் என்பர்.' திம்மதி (Dimathi) என்றொரு அலுவல் உண்டு. இவ்வலுவலர் வழக்கு மன்றத் தீர்ப்பில் கையொப்பம் இடுபவர் ஆவர்." இமாரதி " என்பது பழுதுபார்த்தல் ( மராமத்து ) முதலியவற்தைக் கவனிக்கும் அலுவலரைக் குறிக்கும். o ஹேஜிப் என்பவர் கணக்குப் பிள்ளை. சிட்ரீஸ் " என்பது அரசர் அல்லது பெரிய அதிகாரிகள் சொல்பவற்றை எழுதும் அதிகாரி அல்லது செயலரைக் குறிக்கும் எனத் தெரிகிறது.' காவல்காரர் ' என்பவர் ஊர்க்காவலர் ; இந்நாளைய காவல் துறை யினர் (Police)க்குரிய அதிகாரம் பெற்றவர். கொள்ளைக் கூட்டத்தினரிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது இவரது முதற்கடமை. திருடுபோய் விட்டால் திருடுபோன பொருளைத் தேடிக் கொணர்ந்து கொடுப்பது இவருடைய பொறுப்பு. வலிமை பொருந்திய அரசர்கள் காலத்தில் இவர்கள் மிக்க எச்சரிக்கையுடனும் தம் கடமைகளைச் செய்தனர்; அரசருக்குச் சேர வேண்டிய (வரிப்) பொருளை வசூலித்தனர். இதனால் இவர்களுக்குச் சில உரிமைகள் உண்டு. வலிமையற்ற அரசர்களின் ஆட்சியில் இவர்கள் சுயநலம் உடையராய்ப் பொருளிட்டினர். காவல்காரர்களைப் பற்றிய குறிப்பொன்று,"அ -


19. 12–322 20. P. 166, Administration & Society in the Carnatic - K. Rajayyan. Harkara was in charge of attendance Register of each court - P. 356, Maratha Rule in the Carnatic – C. K. Srinivasan. 21. P. 350, Maratha Rule in the Carnatic; P. 79, The Maratha Rajahs of Tanjore – K. R. Subramanian. 22, 11–39 ... --- ** 23 The Dimati” was the Officer who signed the Court’s decree ordering the payment of the amount due to the successful litigant”-P. 356, Maratha Rule in the Carnatic – C. K. S. 24. 11–25; " Imarathi is the Maramath account” - Page 6 of Deposition of D. W. 19, T. R. Ananthasami Rao, O. S. No, 26 of 1912 25. T -1 26, 1-1 - 27. “The original of this and other three letters written by Sivaji to Venkajee are in possession of the hereditary Chitnis or the Secretary of H. H. Rajah of Satara” – P. 127, History the Marathas by Grant Duff. 28. ச. ம. மோ. க. 5-11 28.அ. ச. ம. மோ. க. 5-11