பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 வைத்துவிட்டார்; மேலும் இக்கடிதம் எழுதிய தாசி சின்னிக்குட்டிக்கு மேற்படி கோவிந்தசாமி 250 ரூ. கடன்பட்டவரானார். அத்தொகையைக் கொடுக்க வேண்டி எழுதியது இக்கடிதம் ஆகும். இக் கடிதத்தால் அந்நாளில் மேட்டுக்குடி மக்களுடைய போக்கும், சில பெண்டிருடைய வயிறு வளர்க்கும் நிலையும், தாசித்தொழில் பரவலாக இருந்தமையும் தெரியவரும். மாலார்ஜி அப்பா: மேலே குறிப்பிடப்பெற்ற தாசி சின்னிக்குட்டியின் கடிதத்தில் மாலார்ஜி அப்பா ஈரிடங்களில் குறிக்கப்பெறுகிறார். அவ்வீரிடங் களிலும் அவரைப்பற்றிய சிறப்புச் செய்தி ஒன்றும் தெரியவில்லை. எனினும் அவருக்கு அடிமை அய்யாசாமி என்றொருவர் இருந்தார் என்றும், அவ் வடிமைக்கு முத்தோஜி அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் மேலே குறிப்பிடப்பெற்ற கோவிந்தசாமி அண்ணா தனக்குரிய சாலியமங்கலம் நான்கு வேலி நிலத்தையும் விற்றார் என்றும், அவ்வடிமை 'சாயே கடை" (டிக்கடை) வைத்திருந்தனன் என்றும் அறியப்பெறும். அந்நாளில் "கொத்தடிமைகள்" உண்டு. மிராஸ்தார்கள் ஒருவர் மற்றொருவர்க்கு அடிமைகளை விற்பதுண்டு. அவ் அடிமைகள் வளம் பொருந்தியவர்கள் ஆதல் இல்லை. ஆனால் மாலார்ஜி அப்பாவின் அடிமை அய்யாசாமி நிலம் வாங்கும் அளவு செல்வவளம் பெற்றிருந்தனன் என்பதும், வாங்குவதற்குரிய உரிமை உடையனாய் இருந்தமையோடு, 'சாயே கடை" நடத்தினான் என்பதும் வியப்பும் இன்பமும் தரும் புதிய செய்திகளாம். "1214 (1214 + 599 =1813): மல்ஹாஜி அப்பா நாகூர்க்குப் போகிறார் கள். அவர்களுடன் கூடப்போகிறவர்கள் ஜாப்தா' என்ற குறிப்பும், இவர் மாஜி ஜெனரல் என்று குறிப்பிடப்பெற்றமையும், இவர் பெருந்தரத்து அலுவலர் என்றமைக்குப் போதிய சான்றுகளாகும். பெரிய அண்ணா, சின்ன அண்ணா: இவ்விருவரும் இரண்டாம் சிவாஜி காலத்திலும் அவர்க்குப் பின்னரும் பெரிய அலுவல்களில் இருந்த வர்கள் ஆவர். பெரிய அண்ணா என்கிற முத்தோஜி கோவிந்தராவ், சின்ன அண்ணா என்பவரான ரா. வெங்கட்ராவ் கோவிந்தராவ்' என்ற எழுத்துச் சான்றுகளால் இவ்விருவருடைய இயற்பெயர் தெரியவரும். 51. கடிதத்தின் தொடக்கத்தில் "காசி சின்னிகுட்டி' என்றும், இறுதியில் இந்தக்கிறல் செல்லக்குட்டி' என்றும் உள்ளன. 52, 6–411 53, 5–216. 54.2-280 11