பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வராஹப்பையா ராமசாமி அய்யா : சேனாதுரந்தரர்" என்றும் சத்திரம் வகையறாவைச் சேர்ந்த திம்மதிகாரர்களின் வேலைபார்க்கும் சேனாதுரந்தரர்" என்றும் இவர் குறிப்பிடப்பெறுகிறார். சேனாதுரந்தரர் என்பதற்குப் பதில் " சேனா முகவர்ய ' என்று குறிக்கப்பெறுதலும் உண்டு. மேலும் " மாஹல் சரஸ்வதி பாண்டாரத்தின் திம்மதிதார் சேனாதுரந்தரர்" என்றும் இவர் கூறப்பட்டுள்ளார். " சங்கீத வித்யை வகையறா கண்காணிப்பும் மாஹல் சரஸ்வதி பாண்டாரம் கண்காணிப்பும் ' இவருடையனவே. - இவர் தெலுங்கு மொழியில் கையெழுத்து இட்டமையால் இவர் தெலுங்கு மொழி அறிந்தவர் என்றும், இவர் தெலுங்க பிராமணர் என்றும் தெரியவரும். இவர் வழியினர் இவ்வூரில் உள்ளனர் என்பதும், ஒரு தெருவுக்கு இவர் பெயர் வைக்கப்பெற்றுள்ளது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கனவாகும். இவர் பல்வேறு அலுவல்கள் வகித்தவர் என்பது தெளிவு. இவர் மிகுந்த செல்வாக்குள்ளவர் ஆகவும் காணப்பெறுகிறார். இவர்க்குத் திங்களொன்றுக்கு ரு. 95 ஊதியம்' என்று தெரிகிறது. = இவர் தந்தையின் பெயர் ராமசாமி ஐயா என்பதும், அவரும் இசையில் வல்லுநர் என்பதும், இசை என்ற தலைப்பில் எழுதப்பெற்றுள்ளன. இவர் சில வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளமை சில ஆவணங்களால்" தெரியவரும். இவருடைய மகன் ராமசாமி என்ற பெயருடையவர்." இவருடைய தாயார் 1836இல் இறந்துபட்டார் என்றும்" இவர் மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமணம் 1854இல் நிகழ்ந்தது" என்றும் தெரிகின்றன. இவர் இசையில் வல்லுநர் ஆக இருந்தமையின், " இந்துஸ்தான் கர்நாடகம் ஆங்கிலேயப் பாட்டும் நான்கு வாத்தியங்களுக்குக் குறையாமல் கற்றுக்கொண்டு தயாராக இருக்கவேண்டும் " என்று இவர் பணிக்கப்பட்டிருந் தார். ஆனால் இவர் குறிப்பிட்டபடி தேர்ச்சியடையவில்லை : அதனால் 1846இல் இவருக்கு ரூ. 120 அபராதம் விதிக்கப்பட்டது என்று ஒரு ஆவணம் கூறுகிறது." இவர் வைதிக பிராமணர் ஆகையால் இவர் வேத முறைப்படி, 1830 வைசாக சுத்த நவமி திங்கட்கிழமையிலிருந்து ஆபஸ்தம்ப லோம பூவர்வக யக்ஞம்" செய்தார்" என்று தெரிகிறது. 55. .1-814. 56. 12-96 முதல் 102 மடிய_ 57.9-95; 10.81 - - 58. 12-154 59. 12–1 60. 2-164 61. 2-162; 10–63, 65, 66 62. ச. ம. மோ, த. 5-20 63. 1-220 64. ச. ம. மோ, த. 1-28 65. 4.428. 66. வைகாசி சுத்த துவாதசி வியாழன்" என்று ச. ம. மோ. த. 12-88இல் உள்ளது 67. ஆபஸ்தம்பம் - தைத்ரேய சாகையில் ஒரு பிரிவு, தைத்திரேயம - எகர்வேத் சிாடுக களுள் ஒன்று 68. யக்ஞம் - யாகம்; வேள்வி 69. 12-849; ச. ம. மோ. க. 11-86