பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 1828க்குரிய ஆவணம் இவரைச் ' சதாசிவ தீகூஜித்பண்டித் ” என்று குறித்த போதிலும் பின்னர் இவர் பெயரில் ' திகூஜித் ” என்பது விடுபட்டிருந்தது. ஆகவே 1836இல் 'ராஜேபூரீ சாதாசிவ கேசவபண்டிதர் அவர்களுக்கு "தீகூஜிதர் பண்டிதர்" என்று எழுதவும்" என்று ஓராணை பிறப்பிக்கப்பெற்றது. இவர் குப்பா ஜெட்டி என்றவரிடம் இருந்து 1836இல் சாவடி குளம் தோட்டம் ஆகியவற்றை விலைக்கு வாங்கினார். அவற்றுக்கு 'ரமணிய வனம்" என்று பெயரிட்டார். இதேயாண்டில் வைரப்பதக்கம் ஒன்று அரசரால் இவர்க்கு அளிக்கப்பெற்றது. 1837இல் இவருக்குக் கணந்தங்குடி கிராமத் தில் சுரோத்திரியம் தொடுக்கப்பெற்றது ; (செய்கால் 11 மா , அனாதி தரிசு 3 வேலி ). == இவர் 1841இல் கோட்டையின் வெளியில் வில்வக்காடு தோட்டத்தில் சிவாலயம் கட்டிக் " கேசவ ஸ்துதேசுவர சுவாமியை எழுந்தருளச்செய்து பூசை நிவேதனத்துக்குத் திருவையாறு அரண்மனைத் தோட்டம் வருமானத்தைத் தருமாறு" வேண்டிப் பெற்றார்." இவருக்கும் சமஸ்தானத்துக்கும். ஏதோ வேறுபாட்டுணர்ச்சி வந்திருத்தல் வேண்டும். இவருக்கு அளிக்கப்பெற்ற விருதுகள், வெள்ளி ஹெளதா, ரதம், கல்லிழைத்த நகைகள், தங்க நகைகள் ஆகியவை சர்க்காருக்குத் திருப்பித் தந்துவிடவேண்டும் என்று 3-11-1841 இல் ஆணை வந்தது. 24-11-1841இல் " நான் அபிமானபுத்திரன் ; ஆகையால் என்னுடைய பெருமைக்காகக் கொடுத்தவையே தவிர உங்களுடைய வேலைக்காரன் என்பதற்காகக் கொடுத்தவை அல்ல : ஆகவே கொடுக்கமுடியாது ' என்று மறுத்து எழுதினார். 27-11-1841இல் " பிள்ளை என்கிற சொந்தம் ஆனால் தகப்பனார் கொடுத்ததைத் திரும்பிப்பெற அவருக்கு அதிகாரம் உண்டு ' என்று சர்க்கேல் பதில் எழுதி, 17-12-1841இல் "நீங்கள் சரியாகப்பதில் கூறவில்லை; ஆகவே எல்லாக் காகிதங்களும் ரிஸிடெண்டுக்கு அனுப்பப்பட்டன." என்றும் எழுதினார். - - - - - - _ _ - -- மேலும் சோமநாத தீகூஜித் பண்டித் இனாம் பெற்றது 96 வேலி 3 ம 25: குழி என்ற குறிப்பும் காணப்பெறுகிறது." -- -** - இவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும் தம்மிடம் இருந்த வெள்ளி சாரட், ரதம், யானை, தந்தப்பல்லக்கு மேனாபல்லக்கு ஹெளதாக்கள் ஆகியவற்றைத் திரும்பித் தந்துவிட்டனர். ஆதல்வேண்டும்." - 79. ச. ம. மோ. த. 11-45 80. ச. ம. மோ. த. 8.25 31. 2-269, 270 82. 5-288, 289 83. ச. ம. மோ. த. 18-6 84. ச. ம. மோ. த. 2-88 85. ச. ம. மோ, த. 9-25