பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அண்டை நாடுகளுடன் தொடர்பு சேதுபதிகள் மதுரை நாயக்கருக்கு அடங்கியிருந்தது இராமநாதபுரம் அங்குக்கிழவன் சேதுபதி என்பவர் ஆட்சி செய்தபொழுது சுயேச்சையடைய விரும்பினார்: புதுக்கோட்டை தொண்டைமானுடன் மணவுறவு கொண்டார். தஞ்சை மராட்டிய அரசர் ஸாஹஜியின் உதவியால் மதுரைக்குஅடங்கி இருத்தலினின்று விடுபட்டார். அதன்பொருட்டுப் பாம்பாற்றுக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடைப் பட்ட நிலப்பகுதியை மராட்டிய மன்னருக்கு அளித்தார். இது தஞ்சை மராட்டிய முதன் மன்னர் வெங்காஜியின் காலத்தில் நிகழ்ந்தது. அடுத்து வந்த ஸாஹஜி காலத்தில் கிழவன் சேதுபதி அறந்தாங்கிக் கோட்டையை 1709 இல் கைப்பற்றினார். லாஹஜியின் தம்பி முதலாம் சரபோஜி காலத்தில் இராமநாதபுரத்தில் ஆட்சிப்பொறுப்பு எய்துவதுபற்றிச் சச்சரவு ஏற்பட்டது. கிழவன்சேதுபதியின் கவிகார மகன் விஜயரகுநாதர் 1720இல் இறந்தார்; இறப்பதற்குமுன் தன் உடன்பிறந்தவனின் மகன் தண்டைத் தேவரை அரசராக்கினார். கிழவன் சேதுபதியின் காமக்கிழத்தியின் மகன் பவானிசங்கர் தான் அரசராக விரும்பினார். தஞ்சை அரசர் உதவி புரிந்தார். ஆனால் பவானி சங்கர் தாம் கூறியவண்ணம் பாம்பாற்றுக்கு வடக்கில் உள்ள நாடுகளைத் தரவில்லை. ஆகவே சரபோஜி தண்டைத் தேவருக்கு உதவி புரிந்து, பவானி சங்கரொடு போர்புரிந்து சிறைப்படுத்தினார். பின்னர்ப் பாம்பாற்றுக்கு வடபகுதியைச் 1. The Maratha Rajas of Tanjore-K. Subsamanian P. 22, 23 2. The Maratha Rajas of Tanjore- K. Subramanian P. 28