பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iw

தென்னிந்தியக் கோயில் சாஸனங்கள் மூன்று தொகுதிகளாக" விளக்கக் குறிப்புக்களுடனும் ஆராய்ச்சி யுரைகளுடனும் வெளிவந்துள்ளமை ஆராய்ச்சி யுலகு நன்கறியும்.

தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையின் வெளியீடாகப் பாளையப்

பட்டுக்களின் வமிசாவளிகஅ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகள் வெளிவந்துள்

TெஒT,

சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாக மெக்கென்சி தொகுதிகள் என்ற நூல் 1972இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 341 தமிழ்ச் சுவடிகளுக்கு விளக்கக் குறிப்புக்கள் உண்டு.'ஆ

மெக்கன்சி தொகுப்பில் பெரும்பாலும் வரலாறு பற்றிய சுவடிகளே உள்ளன. அத்தகைய வரலாற்றுச் சுவடிகளுள் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு பற்றிய சுவடிகள் சிறப்பிடம் பெறுவனவாகும்.

தஞ்சை மராட்டிய மன்னர்களைப் பற்றிக் காகிதக் கையெழுத்துச் சுவடி கள் இருந்தபோதிலும், அச் செய்திகளையே கூறும் மராத்திக் கல்வெட்டு இருத் தல் வரலாற்றாய்வாளர்கட்குப் பெருவிருந்தாக அமைகின்றது.

மராட்டியர் வரலாறு கூறும் தமிழ்ச் சுவடி பாபுராவ் என்பவரால் 1808 மார்ச்சுத் திங்கள் 25ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. டி 3762 என்ற சுவ4. தரங்கம்பாடியில் இருந்த வேறொரு சுவடியைப் பார்த்து 4-1-1804இல் எழுதப் பட்டது என்று அச்சுவடியில் காணும் குறிப்பால் அறியப்பெறும். டி. 8762 எதைப் பார்த்துத் தரங்கம்பாடியில் எழுதப்பட்டதோ அதுவே முதல் சுவடி யாதல் கூடும் என்றும், பாபுராவ் மெக்கன்சியின் உதவியாளர்களுள் ஒருவர் என்று அறியப்பெறுதலால் அவர் தரங்கம்பாடியில் இருந்திருத்தல் கூடும் என் றும், அவர் எழுதி வைத்திருந்த தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு நோக் கியே, வேதநாயகர் சேகரித்த டி 3762 என்ற சுவடி 4-1-1804இல் எழுதப்பட் டிருக்கலாம் என்றும் ஊகித்தறிய வாய்ப்பு இருக்கிறது.

15. தி. ந. சுப்பிரமணியம் - தென்னிந்திய கோயில் சாஸனங்கள் பகுதி I 1953;

பகுதி 11 1954; பகுதி IIi'பாகம் 1 1958; பகுதி III 1 பாகம் 1 1957

13.அ. தொகுதி 1 1981; தொகுதி 11 1981; தொகுதி III 1981

15ஆ. மேலும் "மெக்கன்சியின் தமிழ்ச்சுவடிகள் ஒராய்வு' என்ற முனைவர்பட்டம் ஆய்வேட் டில், செஞ்சி ராசாக்கள் கைபிது (டி.381ல், அனகேசுவிர ராசன் கதைச் செய்யுளுரை 4 ஆ998: டி 2764); தெய்வீகராசன் கைமீது டி 8028; டி :421) என்ற மூன்று நூல்களை ஆய்வுக் குறிப்புக் களுடன் புலவர் ம. இராசேந்திரன் தந்துள்ளார்.