பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தஞ்சை மராட்டிய



அதுக்கு பிற்பாடு தஞ்சாவூர் விசையறாகவ னாயக்கன் வகையெறா பெஷ்கள் முதலாகிய பணம் குடுக்கிறத்துக்கு தில்லுமல்லும் பண்ணிக் கொண்டு ஒண்ணுக் கொண்னு நீ பெரியவன் நான் பெரியவன் என்று சற்ச்சையாய் விசையாபுரத்துக்கு அனுப்பி வைத்த வைக்கீலையுந் தள்ளிப்பொட்டு* கோட்டை வெளியிலே யிருக்கிற ரெண்டு வTர்களையும் தகாப்பண்ணவேணுமென்று யோசினைபண்ணி துருகிறதம் பண்ணினபடியினாலே பாறச்சாய் கிட்ட போ யிருந்து" வைக்கீலும் மந்திரியும் பிகடாச்சு' கோட்டை வெளியிலே யிருக்கிற ரெண்டு வஜிர்கள் கிட்ட வந்து இந்த நாயக்கர் கூட்டம் றம்பவும் துற்புத்தி யானார்கள் நடத்தையும் மஹா கெட்டதாக இருக்குது; ருச்சியத்தையு முழுக் கடித்தார்கள்: ஒண்ணோ டொண்ணு சேரயில்லை; இவாளாலே ராச்சியம் சமாளிக்கிறது கூடாதபடியினாலே நீங்களித்த ராச்சியத்தை ஆக்கிரமிச்சுக் கொள்ளுங்கொள்; விறுதாவாய் ஒண்னுக்கொண்ணு சற்ச்சைப்பட்டு பதினைஞ்சு இருபது பேர் செத்துப் போறதாக யிருக்கிறார்கள்; யிருக்கிற சேனைகளும்: இந்த நாயக்கர் கூட்டத்து கைக்குள்ளேயுமில்லை; இண்ணு நாளையிலே அல்லாபண்ணி" நாய்க்கரை அடிச்சுப் போட்டு றாச்சியத்தையுங் கொள்ளை யடிக்கிறவர்களாக யிருக்கிற படியினாலே நீங்களே இந்த றாச்சியத்தை ஆள வேணுமென்று சொன்னார்கள். அப்போ காதலயெக்கிலிசுக்கான் அப்தல் அலிம் ரெண்டு வஜீரும் ரெண்டொரு நாள் மட்டுக்கும் அப்பியந்திரம்பண்ணி சோதிச்சுப் பார்த்தபோது இந்த ரெண்டு பேரும் சொன்னது சரிதான் இதுவு மல்லாமல் றாச்சியத்திலே சேனைகளுடைய" சறுதார்களும் வந்து பேசினார்கள். அப்போ வைக்கீலுக்கும் மந்திரிக்கும் ரெண்டு வஜீரும் சொன்னது: நம்மாலே ஆக மாட்டாது; யேகோஜி ராஜா திருமுல்லைவாடியிலே யிருக்கிறார்; அவருக்கு நாங்களும் கடுதாசி யெழுதிக் கொடுக்கிறோம். நீங்களிருவரும் போய் அவரை அழைத்துக் கொண்டு வந்தால் காரியம் செயமாகுமென்று சொல்லி கடுதாசி எழுதிக் கொடுத்தார். அந்தக் கடுதாசியை வாங்கிக்கொண்டு அந்த மந்திரியும் வைக்கீலும் ரெண்டுபேரும் திருமுல்லைவாடியிலேயேகோஜி ராஜா கிட்ட வந்து கடுதாசும் கொடுத்து கோட்டையிலே யிருக்கிற றாஜாவுடைய ரீதியும் சேனை களுடைய ரீதியும் தாயாதிகளுடைய நடத்தையும் தெரியப்பண்ணி பிருர்த் தனைப் பண்ணினார்கள். அப்போ யேகோசிராஜா சடிசுவாரியாய் சிறுது சேனைகளை கூட அழைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு வந்து ரெண்டு வஜீருட னேயும் பேசிக்கொண்டு அவர்களையும் கூட அழைத்துக்கொண்டு சாலிய

==

14. தள்ளிப்பொட்டு - சரியான அதிகாரம் இல்லை என்று நிராகரித்து (போ. வ. ச. பக். 75) 15. தகாப்பண்னவேனும் - ஏமாற்றிவிடவேண்டும் (போ. வ. ச. பக். 76)

16. பாறச்சாப்கிட்ட போயிருந்து - பாட்சாகிட்ட பணத்துக்குச் சாமீனாயிருந்த நாய்க்கருடைய (டி 3119)

17. பிகடாச்சு - விரோதமாகி (போ. வ. ச. பக். 70)

18. பிருக்கிற சேனைகளும் - பவுகம் (டி3119) 19. அல்லா பண்ணி - கலகம் செய்து (போ. வ. ச. பக். 76)

20. சேனைகளுடைய - பவுசுகறுடைய (டிச119)