பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தஞ்சை மராட்டிய



ககுவாற*சாயபு மொயித்தே பொண், துனுக்கு" பொண் துறொபதாயி" சாயபு மாடிக்குபொண் யெசவந்து பாயி சாயபு, இந்த அஞ்சு இஸ்த்திரிகளிலே தொகப் பனாய் பண்ணி வைத்தது ரெண்டு ஒண்னு மைத்தது தமக்கு பட்டமான பிற்பாடு பண்ணிக் கொண்டார். இது தவிர வைப்பாட்டிகள் மாறாட்டிய சாதி வடுக சாதி னாயக்கர் கூட்டம் உள்பட யேழுபேர். பிறதாப சிங்கு மஹாராஜா வுடைய தங்கை சாமாபாயி என்று மேலே யெழுதியிருந்துதே அந்த பொண்ணை மல்லாற்ஜி காடோஜி றாவுக்கு கலியாணம் பண்ணிக் கொடுத்தார்கள். அப் பால் துக்கோஜி ராஜாவுக்கு வைப்பாட்டி சம்மந்தங்களில் பிறந்த பிள்ளைகள் மூணும் அவர் உயிரோடே யிருக்கச்சேதானே தெய்வகதி யானார்கள். அதிலே னானாசாயபு என்கிறவனுக்கு மாத்திரம் அப்புசாயபு யென்று ஒரு பிள்ளை. அவர் கல்லியாணம் பண்ணின பெண்சாதி கெற்பத்தில் பிறந்தவன். அந்த அப்புசாயபுக்கு கல்லியர்ணம் பண்ண பூரீகள் யில்லாமல்" கவறை" கூட்டத் தில் வைத்துக் கொண்டபூரீகளில் னானாசாயபு என்ற ஒரு பிள்ளை பிறந்துது. அவன் இன்னஞ் சுகமாயிருக்கிறான். இப்போ அந்த வைப்பு சம்பந்தத்தில் பிறந்த ரெண்டு பொண்ணையும் அதுக்குத் தக்கதாய் காடே கூட்டத்தில் கொடுத்தார்.

இந்தப்படிக்கு சறபோஜி ஹாஜா பட்ட மாண்டுகொண்டு அவர்தம்பி துக்கோஜி ஹாஜா சந்ததியுள்ளவரும் ரெண்டு பேரும் ஒருமித்து றாட்சியபாரம் பண்ணிக் கொண்டிருக்கிற போது ஒண்னுக்கொண்னு விட்டுச் சண்டை யினாலே" துக்கோஜி ராஜா கொஞ்சம் சீமை அண்ணன் கிட்ட கேட்டு வாங்கிக் கொண்டு மஹதேவ பட்டணத்தில் பட்டணம் பண்ணிக்கொண்டு தம்முடைய சமுசாரத்துடனே அவடத்தில் வாசம்பண்ணிக்கொண் டிருந்தார்.

கோட்டையிலே சறபோஜி ராஜா றாட்சியம் பண்ணிக்கொண்டிருக்கிற போது அவருடைய பட்டம்பூர் மூணு பேரிலே ரெண்டாவது பெண்சாதி

32. ககுவாற - சக்வார் (போ. வ. ச. பக். 82), சகரா பாயி (டி3119) 33. துனுக்கு - துநபோஜி (போ. வ. ச. பக். 82), துணுக்கு (டி1ே19 ) 34. துறொபதாயி - திரெளபதி பாயி (போ. வ. ச. பக். 82) 35. கல்வியாணம் பண்ண பூரிகள் பில்லாமல் - கல்யாணம் பண்ணின ரீகளே அல்லாமல் (டி3762)

ss. Kavarai is the name for Balija (Telugu trading caste) who have settled in Tamil country. The bulk of the Kavarais in Tanjore are said to bear the

title Nayak** — (Thurston, Castes and Tribes in Southern India Vol. III Pages 263 and 265) m.

36. ஒண்னுக்கொண்னு வீட்டுச் சண்டையினாலே - இரண்டு பேர் அண்ணன் தம்பிக்குங் கிருத்திய சாஸ்திரத்தினாலே (டி:119): 'சண்டையினலே" என்பது டி3782இல் விடுபட்டுள்ளது. 37. சமுசாரத்துடனே - எல்லா சமுசாாத்துடனே (டி5119) 88. அவடத்தில் - மகாதேவ பட்டணத்தில் (டி:119); (போ. வ. ச. பக். 33):

"தகடின துவாரகபுரம் என்னும் ராஜமன்னர்கோயிலுக்குத் தென் பாரிசம் பரதேக்கம் աո: கோட்டை கட்டி, பாரிபட்டனம் ஸ்தாபித்து, அதற்கு மகாதேவபட்டணம் என்று பேர் அளித்து'(திருமுடி சேதுராமன் சுவடி, பக்கம். 8ே7)