பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ү

இம்மராட்டியர் வரலாறு கூறும் சுவடியை மூன்று பகுதிகளாகப் பிரித் துக் கொள்ளலாம்:

1. ஷாஜியின் முன்னோர் பற்றியவை; 2. ஷாஜி, சிவாஜி, அவர் வழியினர் ஆகியோர் வரலாறு; 3. தஞ்சையைக் கைப்பற்றிய ஏகோஜி, அவர் வழியினர் வரலாறு.

பாபுராவ் இம்மராட்டியர் வரலாறு எழுதுவதற்கு ஆதாரமாக இருந்த நூல்களுள் முதலிடம் பெறத் தகுதியுடையது சிவபாரதம் என்பதாகும். இது வட மொழியில் கவிந்திர பரமானந்தர் என்பவரால் எழுதப்பட்டது. இதில் நான்கு சுவடிகள் தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் உள்ளன." இதன் தமி ழாக்கம் ஒரு சுவடிமட்டும் சரசுவதி மகால் நூல் - நிலையத்தில் உள்ளது." சிவ பாரதம் சிவாஜியின் வரலாற்றில் ஒருபகுதிமட்டும் கூறுவது. மேலும் கி.பி. 1697 இல் கிருஷ்ணாஜி அனந்த் சபாசத் என்பார் எழுதிய சிவச்சத்திரபதி என்ற நூலும், கி.பி. 1685இல் முற்றுப்பெற்ற ஸ்ஹானவ் கால்மி வரலாறும். கி.பி. 1718 இல் எழுதப்பெற்ற சிவதிக்விஜய என்ற நூலும், 1760-1770இல் எழுதப்பெற்ற சித்ரகுப்தா எழுதிய வரலாறும், ஜேதேசாகாவளியும் பயன்பட்டிருத்தல் கூடும் என்று ஊகிக்கலாம்.

தஞ்சை மராட்டிய மன்னர்களைப் பற்றிய வரலாற்றுக்குத் தஞ்சை அரண் மனையிலிருந்த ஆவணங்கள் பயன்பட்டிருக்கலாம் என்பது உறுதி; செவி வழிச் செய்திகளும் உதவியாக இருந்திருத்தல் கூடும்.

'தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு' எழுதியவர்களில் திரு கே. ஆர். சுப்பிரமணியன் அவர்கள் மெக்கன்சி சுவடிகளை ஒரளவு பயன்படுத்தி இருத்தல் கூடும் என்றுதெரிகிறது. மெக்கன்சி சுவடிகளைச் சென்னைத் தமிழ்ச் சுவடிகள்" என்று தன் நூலில் குறித்துள்ளார். சீனிவாசன் அவர்கள் இச் சுவடிகளை ஆறு

16. டி. 4223 - டி 4226.

17. இது தஞ்சைச் சரசுவதி மகாவில் உள்ள டி 630 எம் 214 என்ற எண் உடைய ஒலைச் சுவடியாகும். இதன் முதற் பக்கம் இறுதிப்பக்கம் நிழற்படம் பிற்சேர்க்கையில் காணலாம். இச் சுவடி மிக நல்ல முறையில் இருக்கிறது. இச்சுவடி 1710-1728 வரை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்தது என்று இதனைப் பதிப்பித்த திரு. சீராளன் அவர்கள் முன்னுரையில் எழுதியுள் ளர். எனவே அவ்வேடு இற்றைக்கு ஏறத்தாழ 255 ஆண்டுகட்கு முற்பட்டதாதல் வேண்டும். அவ்வேடு இவ்வளவு பழமையுடையதாகத் தோன்றவில்லை. ஒருவேளை பாபுரால் பயன்படுத்து வதற்காகப் படியெடுக்கப்பட்ட சுவடியோ என்றெண்ணத் தோன்றுகிறது. எனின் மூலச் சுவடி பெங்கே என்றற்கு விடை பகர்தல் இயலாததாயுள்ளது.

18. சுப்பிரமணியன், பக்கம் 11.tn. 16,19,28,40,41,48,45,46,49.

19. The Madras Tamil Manuscripts, Subramanian, page 16.