பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தஞ்சை மராட்டிய

9&

அப்போ மந்திரித் தினம் பண்ணுகிறவனும் யோக்கியமான பந்துக்களும் றாச்சியம் பண்ணுகிறத்துக்கு ஒருத்தரும் இல்லையென்று அந்த பாவா சாய புடைய பெண்சாதி சுஜானு பாயி சாயபுக்குடனே பட்டங் கட்டினார்கள். அப்போ சாலியவாகன சகம் தசுளடுக பிங்கள வருஷ முதல் கால யுத்தி வருஷத்தில் கூட றாச்சியம் பண்ணிக்கொண்டிருக்கையில் உறைமுறையாரி லொருத்தன் கோயாஜி காட்டிகே" என்கிறவன் முன்னாலே சறபோஜி றாஜா றாச்சிய மாண்டு கொண்டு இருக்கிற போது துஷ்ட இஸ்த் திரிகளுடைய துற்போதினையினாலே கிறுத்திறமமாய் ஒரு பிள்ளையை உண்டுபண்ணி அவனுக்கு சவவாய் சாஜி ராஜா வென்று பேரும் வைத்து இப்படி நடந்து கிறுத்திறமம் என்று வெளியாய் அந்தப் பிள்ளை பரி காரமும் பண்ணிப் போட்டார்களென்று மேல் எழுதியிருந்துதே இப்போ இந்த கோயாஜி காட்டிகே என்கிறவன் அந்த சவவாய் சாஜி ராஜா பிழைத்திருக்கி றான் என்று நூபி' என்கிற வெள்ளாட்டியின் மகன் ரூபவானா யிருந்தவனை இவன்தான் அந்த சாஜி ராஜாவென்று எங்கும் பிறபலம் பண்ணி அவனைக் கொண்டு வந்து உடையார்பாளையத்துக் காட்டிலே வைத்துக்கொண்டு சமஸ்தானத்திலே இருக்கப்பட்ட மாதபா குடிகள் பாளையக்காரர் வகை யெறாவுக்கு பிறமை பொட்டு" அவாள் கிட்டயிருந்து கொஞ்சம் திரவியம் சம் பாதித்து கொஞ்சம் சேனைகளையும் சேர்த்துக் கொண்டு தேவணாம்பட்டி னத்தி லிருக்கிற இங்கிலீசுகாரருக்கு னானாவிதமாகச் சொல்லி அவாளண்டை யிலிருந்து கொஞ்சம் கும்மக்கு வாங்கிக் கொண்டு அவடத்திலே யிருந்து நாகப் பட்டணம் வகையறாவிலே யிருக்கப்பட்ட உலாந்தக்காரர்' கிட்ட கொஞ்சம் திரவியமும் வாங்கிக் கொண்டு சேனைகளையும் பந்தோபஸ்த்து பண்ணிக் கொண்டு தஞ்சாவூரிலே யிருக்கப்பட்ட சேனைகளுக்கும் கில்லேதார்" முதலான பேர்வழிகளுக்கும் பிறமை யுண்டுபண்ணி அவர்களை அந்தரங்கத்திலே சல்லியம் பண்ணி வைத்து சாலிய வாகன சகம் தசுளசும்’ காலயுக்தி வருஷத்தில் கோட்டையிலே பிரவேசித்து றாச்சியபாரம் பண்ணுகிற சுஜானு பாய் சாயபுவை தள்ளிப்போட்டுத் தான் சிம்மாசனத்திலே உளுக் கார்ந்தான். அவன் காட்டிலேயிருந்து வந்தவ னானபடியினாலே காட்டு

1858 என்று கூறும். திருமுடி சேதுராமன் சுவடி (பக். 302) சகம் 1661 என்னும். (அடுத்த அடிக்குறிப்புக்காண்க) 15. சகம் 1659 - போ. வ. ச. 1858 என்று கூறும் 1659 என்பதற்கே பிங்கள பொருந்தும்.

16. கோயாஜி காட்டிகே - கெளமாஜி காண்டகே (போ. வ. ச. பக். 35) போ.வ. ச. பக். 114& Garzreş «ress-zir erssoerz. Koyagi Ghangte (Srinivasan, Page 235)

17. றுாபி - ரூபி, குப்பி (போ. வ. ச. பக். 86) 18. காட்டிலே என்பது டி3762 இல் இல்லை

19. மாதபா - மாதுபரி (டி3119) "பாதபாகுடிகள்' என்னும் வேறு ஒரு தொடர் டி3162இல் உள்ளது. 20. பிறமைபோட்டு - அறிமுகப்படுத்தி (போ. வ. ச. பக். 86)

21. தேவனும்பட்டினம் - தேவினாம்பட்டினம் - Fort St. David 22. உலாந்தக்காரர் - டச்சுக்காரர் 23. கில்லேதார் - கோட்டை காவலன்

24. சகம் 166 ெ