மன்னர் வரலாறு
99
ராஜா யென்று பிறபலமாகப் போச்சுது.[1] அந்த காட்டு ராஜா கொஞ்ச நாள் ராச்சிய பாரம் பண்ணுகிறபோது அவன் நடத்தையினாலே அறிந்து கொண்டு முன்னாலே அவன் பிரமையிலே அகப்பட்டிருந்த கில்லேதாரும்[2] சேனைகளும் சொன்னது: இந்த காட்சி றாஜா[3] வென்று சொல்லப்பட்டவன் வெள்ளாட்டி ரூபி[4] யுடைய பிள்ளை. இவன் பேர் சுபானியா: கிறுத்துறமத்தினாலே றாட்சியம் பண்ணுகிறதுக்கு வந்தா னென்று நமக்கு னிச்சயமாக தெரிந்து பிறதிட்சமாக றாஜ துறோகம் பண்ணி வெள்ளாட்டி யுடைய மகனை சிம்மாசனத்தின் பேரிலே உளுக்கார வைத்தோமென்று றொம்பவும் விதனப் பட்டு யோசினை பண்ணினது: துக்கோஜி ராஜா சேத்துக் கொண்டு வைத்திருந்த ஸ்ரீகளிலே பிறதாப சிங்க ராஜாவுடைய தாயார் றாஜாவுடைய சமான சாதி பொண்ணானபடியினாலே அந்த பிள்ளை இராட்சியத்துக்கு யோக்கியம் என்று எல்லாரும் நிச்சயம் பண்ணி சாலிய வாகன சகம் தசுளசுக[5] சித்தாற்தி வருஷம் பிரதாப சிம்ம ராஜாவுக்கு பட்டம் கட்டினார்கள். அந்த வருஷத்தில் தானே பிரதாப சிம்ம ராஜா விவாகம் பண்ணிக் கொண்ட பட்டம் ஸ்ரீகளிலே ரெண்டாவதுஸ்ரீ றோபதாபாயி[6] சாயபு கெற்பத்திலே துளசா ராசா, பிறந்தார்.
காட்டு ராஜா வென்கிறவன் வெள்ளாட்டி மகன் சுபானியயென்று பேர். அப்படிக் கொத்தவனுக்கு தஞ்சாவூர் றாட்சியம் போசலெ வமிச பரம்பரையாய் பண்ணிக் கொண்டு வந்த றாட்சியத்தை இந்த வெள்ளாட்டி மகனுக்கு ஆனது சேதி உறைமுறையார் முதலான சகல செனங்களுக்கும் வியக்தமாய் தெரிந்த பிற்பாடு, இந்த கிறுத்திறமத்திலே சேர்ந்து இருந்த சயிது யென்கிறவன் பரம்பரையாய் ராஜாவுடைய சேவுகம் பண்ணிக் கொண்டு வருகிறோமென்றும், வெகு செனங்களுக்குள்ளே[7] லட்சை[8] யாகுதென்றும், இதுலே முக்கியமாய் யெகோஜி ராசா சேர்மானம் பண்ணியிருக்கப்பட்ட[9] ஸ்ரீகளுக்குப் பிறந்த சந்திர பானுஜி போசலே அவர் பிள்ளை னாயக்கஜி போசலே யென்கிறவன் பாக்கியத்திலேயும் சவுரியத்திலேயும் பிறக்கியாதியாகயிருந்தான். அவன் பயத்தினாலே இப்போ றாட்சிய வம்சத்திலே பிறதாப சிம்ம ராஜா றூபத்திலேயும் கிறிகை[10] குணம் புத்தி இந்த குணங்களிலே யோக்கியமா யிருக்கிறா ரென்று பட்டம்
- ↑ பிறபலமாய்ப் போச்சுது - லோக வசந்தையாய் அவனுக்குப் பேராச்சுது (டிச119)
- ↑ கில்லேதார் - சையிந்து அல்லது சையிது (போ. வ. ச. பக். 87)
- ↑ காட்சி ராஜா - காட்டு ராஜா (டி3762)
- ↑ ரூபி - குப்பி (போ. வ. ச. பக். 86)
- ↑ சகம் 1661 போ. வ. ச. சகம் 1660 என்று கூறும்
- ↑ றோபதாபாயி திரெளபதி பாயி, துணுகொசியின் பெண் துரோபதாபாயி (டி. 119; துக்கோஜி பின் பெண் (போ. வ. ச. பக். 86)
- ↑ வெகுசனங்களுக்குள்ளே - வெகுசனங்களுக்கு எல்லாம் (டி3762)
- ↑ லட்சை - வச்சை (டி3762), (டி.பி.119); லஜ்ஜை - வெட்கம்
- ↑ சேர்மானம் பண்ணியிருக்கப்பட்ட - சேர்த்துக்கொள்ளப்பட்ட (போ. வ. ச. பக். 87)
- ↑ கிறிகை - செயல் (போ. வ. ச. பக். 87)