உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

101

போடலாமென்று கெறுவத்தினாலே[1] தன் பொண்ணை சந்தா சாயபு பிள்ளைக்குக் கொடுத்து அந்த சந்தாசாயபு பிள்ளைக்கு தஞ்சாவூர் றாச்சியம் சிம்மாசனத்தின் பேரிலே உளுக்கார வைத்து[2] சகல அயிசுவரியமும் தான் அனுபவிக்க வேணுமென்று நிச்சயமாய் யோசினை பண்ணி தம்முடைய தம்பி சயிது காசிமுடனே யோசினை பண்ணினான். இந்த போசலே உத்தம வமிசத்தினுடைய புண்ணிய பிறபாவத்தினாலேயும் பிறதாப சிம்மராஜா யோகத்தினாலேயும் அந்த சயிது காசிம் என்கிறவன் தன் தமையன் பண்ணின றாஜ துரோகம் சுவாமி துறோகம் இதுகளை சயிக்க மாட்டாமல் மகாறாஜாவுக்கு அந்தரங்கத்திலே இந்த சயிதுடைய கிறுத்திறமமெல்லாம் அறியப் பண்ணிவித்தான். அப்போ பிறதாப சிம்மறாஜா உடனே கோபம் பண்ணாமல் தூர யோசினை பண்ணி அந்த சயிது காசிமுவைப் பார்த்து நீ சொல்லுகிறது நிசம்தானா வென்று கேட்டார். அதுக்கு அந்த சயிதுகாசிமு என்கிறவன் கொஞ்ச தினத்தில்தானே நான் சொல்லுகிறது பிறத்திஷமாய்[3] மஹாறாஜாவுக்கு தெரியவருமென்று சொல்லி உத்தாரம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டான். உடனே நாலஞ்சு நாளைக்குள்ளே சயிது என்கிறவன் தமக்கு முஸ்தீப்புப் பண்ணி[4] றாஜாவுக்கு வைத்து[5] தன் பெண்னை சந்தாசாயபு பிள்ளைக்குக் குடுக்கிறோம் அதினாலே சமஸ்தானத்துக்கு பலம்தானென்று சொன்னான்.[6] அப்போ மஹா றாஜா சொன்னது: நம்முடைய ராஜ்யத்துக்கு பலம் ஆக வேண்டுமென்று உம்முடைய பெண்ணைக் கூட நவாயித்[7] தவனுக்குக் கொடுக்கிறாயென்று சந்தோஷப்பட்டு கல்லியாணத்துக்கு வேண்டிய சிலவுக்கும் கொடுத்து கல்லியானம் மாத்திரங் கோட்டையிலே பண்ண வேண்டாம், மத்தியாற்சுனத்திலே[8] பண்ணச் சொல்லி


  1. “Saiyid, the Killedar of the Tanjore fort and the most powerful captain: conscious of the army which backed him, interfered successfully in the internal matters” - (Srinivasan, Page 250)
  2. “He (Saiyid) seems to have entertained the idea of usurping the throne for his daughter” - (Subramanian, Page 49)
  3. பிறத்திஷமாய் - பிரத்தியட்சமாய் (டி3119)
  4. முஸ்தீப்புப்பண்ணி - செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து (போ. வ. ச. பக். 89)
  5. 11. ராஜாவுக்கு வைத்து - ராஜாவிடம் போய் (போ. வ. ச. பக். 89)
  6. என்று சொன்னான் - என்று அற்சு பண்ணினார் (டி3119); அனுமதி வேண்டினான் (போ' வ. ச. பக். 89); அற்சு - அர்ஜி - விண்ணப்பம்.
  7. 1“The Navayats are summed up in the Madras Census. Report, 1901, as “a Musalman tribe, which appears to have originally settled at Bhatkal in North Canara, and is known on the west coast as Bhatkali. The derivation of the name is much disputed. There are five sub-divisions of the tribe, namely Kureshi, Mehkeri. Chida, Gheas and Mohagir. It takes a high place among Mussalmans and does not intermarry with other tribes” - (Thurston, Castes and Tribes of southern India, Vol. V, Govt. Press, Madras, 1909, Page 272)
  8. மத்தியார்ச்சுனம் - திருவிடைமருதுார்