பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தஞ்சை மராட்டிய

நல்ல பேச்சாய் சயிதுக்குச் சொன்னார். அப்போ சயிது சம்மதித்து அப்படியே மத்தியாற்சுனத்துக்கு போய் வெகு சம்பிறமாய்[1] கலியாணமும் பண்ணி மறுபடியும் கோட்டைக்கு வந்து சேர்ந்த பிற்பாடு சயிது பண்ணின கிறுத்திறமம் என்னமென்றால், சந்தா சாயபுவை சேர்ந்த பேர்களுக்கு நீங்கள் மத்தியாற்சுனத்திலே இருந்து றாத்திரியே பிறபட்டு அறுணோதை காலத்திலே கோட்டையிலே வந்து சேருகிறது. வாடிக்கையின்படி[2] கோட்டை வாசல்ப்படி[3] திறக்கிற போது சேனைகளுடனே[4] கோட்டைக்குள்ளே நுழைந்து றாஜாவுடைய வீட்டின் பேரிலே அல்லா பண்ணி[5] உள்ளே நுழைந்து சண்டைபண்ணி றாட்சியம் சுவாதீனம் பண்ணிக் கொள்ளுகிறது. சேனாபதி[6] கில்லேதார் இந்த ரெண்டு நம்முடைய பாரிசமா யிருக்கிறபடியினாலே உங்களுக்கு ஒருதரும் யெதிர்த்து நிற்கமாட்டார்களென்றுசொல்லி கடுதாசியெழுதி ஆப்த்த மனுஷியாள் கையிலே கொடுத்து றகசியமாய் அனுப்பிவித்த சேதி இந்த சயிதுனுடைய தம்பி சயிது காசிம் யென்கிறவன் இந்த கடுதாசி பத்திரத்து றகசியத்திலே இருந்தவ னான படியினாலே இந்த கிறுத்திறமங்களை மஹா ராஜாவுக்கு முன்னாடியாகத் தெரியப் பண்ணினான். அது தவிர மஹாறாஜாவுடைய அந்தரங்க மனுஷாளையும் கூட அழைத்துக்கொண்டு சயிது எழுதின கடுதாசியும்[7] அதைக் கொண்டு போன மனுஷனோடே பிடித்துக் கொண்டு வந்து மஹாறாஜாகிட்ட ஒப்புவித்தான். இந்த பிறகாரமாய் மஹாறாஜாவுக்கு பிறபல சாக்ஷி வந்த பிற்பாடு மஹா ராஜா அவர்கள் மெத்தவும் ஆச்சரியமுங் கோபமுமாய் தம்முடைய ஆப்த்தமா யிருக்கப்பட்ட சிறுது பேரை சேத்துக் கொண்டு அதில் முக்கிய சற்தார் மஹா றாஜாவுடைய மச்சினன்[8] மல்லாற்சி காடே, மஹாறாஜாவுடைய முக்கிய காரியஸ்தன் அன்னப்பா சேட்டிகை, ஆப்த்தமா யிருக்கப்பட்ட சற்தார் மனாஜி றாவு ஜக்தாப் இவர்களுடனே யெல்லாம் தம்முடைய நிற்செய யோசனையைத் தெரியப்பண்ணி சயிது யென்கிறவனை கொண்ணு[9] போடுகிற தென்று நிற்செயம் பண்ணி ஒரு னாள் தம்முடைய சறதாற்கள் ஆப்த்தமா யிருக்கப்பட்ட சற்தார்களை யெல்லாம் ஆயுதத்துடனே ஒரு யிடத்திலே பதுங்க வைத்து தாம் ஒரு யிடத்திலே பிறத்தியேகமாய் உளுக்கார்ந்து கொண்டு மொகலண்டையிலிருந்து வந்த சிறுது காகித பத்திரங்கள் பார்க்க வேண்டியிருக்கு தெண்டு சயிதுவை அழைத்தனுப்பிவித்தார். அப்போ சயிது உன்மத்த திசை யினாலே மஹாறாஜாவுடைய யோசினை யெந்த விதத்திலே தெரியாம லிருந்தபடியினாலே மஹாறாஜா கிட்ட யிருந்து அஞ்சாறுவிசை அழைக்க


  1. சம்பிறமாய் - சம்பரமமாய் (டி3119)
  2. வாடிக்கையின்படி - தண்டக்கப்படிக்கு அந்த வேளையிலே (டிச119)
  3. வாசல்படி - வாசல் கதவு (டி3119)
  4. சேனைகளுடனே பவுசுடனே (டி3119)
  5. ராஜாவுடைய வீட்டின் பேரிலே அல்லாப் பண்ணி - அரண்மனை நோக்கி வந்து (போ.வ.ச. பக், 89)
  6. சேனாபதி - பவுசுதார் (டி3119;
  7. கடுதாசியும் பக்சினிசு காயிதம் (டி3119)
  8. மச்சினன் - மைத்துனன் (டிச119); சர்தார் (போ.வ.ச.பக் 99)
  9. கொண்ணு - அடித்து டி.3119