பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi

இடங்களில் குறிப்பிட்டுள்ளார்". அன்னோர் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு எழுதுங்கால் இச்சுவடிகளையோ, மராத்தியக் கல்வெட்டுக்களையோ ஆதரவாக ஏற்றுக் கொண்டதாகத் தோன்றவில்லை. ா

எனினும் இச்சுவடிகள் வரலாற்றாய்வுக்குத் துணை புரியும் என்ற கருத் தாலும், தென்னாட்டு அரசியலிலும் சமுதாய வாழ்க்ைகயிலும் மராட்டிய அரசர்களின் பங்கு மதிப்பிடற்கு இச்சுவடிகள் பயன்படும் என்று கருதியமை யாலும் இச்சுவடிகளுள் ஒன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கிடைத்த மூன்று சுவடிகளுள் டி 3119 குறைச்சுவடி: டி 3762’ படிப்ப தற்கு எளிமையாக இல்லை; டி 3180," டி 3762 போன்று பிழைகள் மலிந்ததா யினும், படித்தற்கு எளிமையாய் இருக்கிறது. ஆகவே டி 3180 எண் உள்ள் சுவடி இங்குப் பதிப்பித்தற்கு ஏற்றதாகக் கொள்ளப்பட்டது.

பதிப்பிங்குங்கால் சுவடியில் உள்ளவாறே பதிப்பிக்கப்பட்டுள்ளது எனி னும் நிறுத்தக் குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. போன்ஸ்லே வமிச சரித் திரம் ஒப்பீடு செய்யப்பெற்று இவற்றிடையே காணப்பெறும் வேறுபாடுகள் ஆங்காங்கே அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன. டி 3762, டி 3119 ஆகியவற் றுடனும் வேண்டிய இடங்களில் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது. மிகக் கடின மான, வழக்குவீழ்ந்த அந்நாளில் வழக்கிலிருந்த சொற்றொடர்களுக்கு - சொற்களுக்கு அடிக்குறிப்பில் பொருள் தரப்பெற்றுள்ளது; அல்லது போ. வ. ச. வில் பயன்படுத்திய சொல் - சொற்றொடர் தரப்பட்டுள்ளது. இது ஒரளவு பெரிய சுவடியாகையால் 16 தலைப்புக்கள் கொடுத்து அச்சிடலாயிற்று. இதன் சுருக்கமும், கால்வழிமுறையும் அடுத்துத் தரப்பட்டுள்ளன. மகாராஷ் டிரத்து வரலாற்றுப் பேராசிரியர்கள் தம் நூல்களுட்கூறிய செய்திகளோடு மாறுபட்ட இடங்களும், இச்சுவடியில் உள்ள செய்திகளுக்கு ஆதரவுகளும் இன்றியமையாத இடங்களில் தரப்பட்டுள்ளன.

திருமுடி சேதுராமன் சுவடி என்றொரு சுவடி தஞ்சைச் சரசுவதி மகாலில் உள்ளது. இதன் மூலச்சுவடி 15-8-1849இல் எழுதி முடிக்கப்பட்டது. இது போ. வ. ச. வைப் பெரிதும் பின்பற்றியது என்னலாம். திருவிடைமருதுாரி லுள்ள அமர்சிங்கின் சார்புடைய சுவடி ஆகையாலும், 1849-இல் எழுதப்பட்ட மையாலும், அமர்சிங்கைப்பற்றியும் அவர் வழியினரைப் பற்றியும் சில செய்தி கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இச்சுவடி, பெரும்பாலும் போ. வ. ச.

20. sefarmarair, užasih 13,154, 188f.n., 319, za If.n., 336. f.n. 21. பட்டியல் வரிசை எண் 679 F,

  1. 3. HF |F Jб 1.

A.J. |T IH of 4.