பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

107

 பொறுமையா யிராமல் யெந்த மஹா ஹாஜாவுடைய அன்னம் சாப்பிட்டு பெரிய மனுஷனானானோ அவாள் பேரிலே தானே ஆயுதம் பிடித்து ரெண் டொருத்தருக்கு காயப்படுத்தினத்தின் பேரிலே மஹா ஹாஜாவுக்குத் தெரிந்து அடங்கமாட்டானென்று தம்முடைய சனத்துக்கு அல்லா பண்ணச் சொல்லி" உத்தாரம் பண்ணினார். ஒருவருக் கொருவர் அடிதடியிலே அண்ணப்பா அவருடைய தம்பி முதலான ஆறேழுபேர் விழுந்து போனார்கள். அப்பால் மஹா ராஜாவுக்கு அண்ணப்பா சேட்டிகை சர்க்கார் காரியம் பண்ணினத்தை நினைத்து நினைத்து பசியாதாபம்றொம்பவும் படுகிறத்துக்கு காரணமாச்சுது"

அதின் பிற்பாடு திருச்சினாப்பள்ளியிலே இருந்த முறார்ஜி கோற்படே என்கிறவன் தன்னுடைய மந்திரி யின்னிசுகான் என்கிற துலுக்கனுடைய போத னையினாலே தஞ்சாவூர் றாச்சியம் கொஞ்சமாக" யிருந்தாலும் நல்ல" றாச்சிய மானபடியினாலே அதைக் கட்டிக்க கொள்ள வேணும்; ஆனா லந்த றாஜா நமக்கு யெஜமானன் யாகையால் சீமையை யேதாகிலும் கட்டிக்கொள்ளவேணும்; அதுவும் சமாதானமாய்க் குடுக்க மாட்டார்கள்; ஆகையால் சில்லரை உபத்திரம் பண்ண வேணும் என்கிற புத்தியினாலே யின்னிசுகான் பிறகாலே ரெண்டா யிரம் குதிரை தயினாத்துப் பண்ணி" அனுப்பிவித்தான். அந்த யின்னிசுகான் தஞ்சாவூர் சீர்மையில் சிறுது விடத்தில் அடிக்கிறதும், சிறுது விடத்தில் கொள் ளையடிக்கிறதும், இப்படியாக சண்டைக்கு எதிர்த்து நில்லாமல் ரெண்டொரு வருஷம் சில்லரை உபத்திரம் றொம்பவும் பண்ணினான். அப்போ பிறதாப சிம்ம ஹாஜா தன்னுடைய சேனாபதி மனாஜி றாவுக்கு உத்திரவு பண்ணி சிறுது சேனைகளையும் குடுத்து அனுப்பிவித்தார். அவர் போய் அந்த யின்னிசு கான் யென்கிறவனை கொஞ்ச நாளாக துரத்திக் கொண்டு கடைசியில் ஒரு ஆத்தங்கரையில் மடக்கிக் கொண்டு "இரனுாறு முன்னுாறு பேரைக் கொண்ணு அன்னுாறு அறணுாறு குதிரையும் மனுஷாளையும் பிடித்துக் கொண்டு வந்தார்.' அந்த சண்டையில் இன்னிசுகான் என்கிறவன் ஒளித்து போய் விட்டான்.' அத்தோடே அந்த முறு றாவு உபத்திரம் நிண்ணுபோச்சுது.'

65. அல்லாப் பண்ணச் சொல்லி - கலகம் செய்யும் படி (போ. வ. ச. பக். 94)

67. கொஞ்சமாக - சிறிதாக (போ. வ. ச. பக். 94) 68. நல்ல - செழிப்பான (போ. வ. ச. பக். 94) 69. தயினாத்துப்பண்ணி - சேர்த்து (போ. வ. ச. பக். 94) 70 முதல் 71 வரை போ. வ. ச. வில் பின்வருமாறுளது: "அவனுடன் சண்டை செய்து அவ னுடைய 300 குதிரைப் படைகளை நாசமாக்கி 700 காலாட்களையும் 500 குதிரைகளையும் இழே வீழ்த்தினார்.' - 72. ஒளித்தது சகம் 1671 (கி.பி. 1749) (திருமுடிசேதுராமன் சுவடி பக்கம் 817) 73. நிண்ணுபோச்சுது - முடிவடைந்தது (போ. வ. ச. பக். 95)

“There was little love between Pratap and Murari Rao, as a result of which an understanding developed between the latter and the French, and the Tanjore kingdom was subjected to the relentless depredations carried out systematically by the Maratha adventurer” - (Srinivasan, Page 254)