பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தஞ்சை மராட்டிய



அதின் பிற்பாடு பத்தேசிங்கு றெகோஜி போசலே திருச்சினாப்பள்ளியி லிருந்து சந்தா சாயபுவை பிடித்துக்கொண்டு சாத்தாராபுனாவிலே ஹாஜாவின் உத்திரவுப்படிக்கு ஒரு கெடியிலே போட்டுவிட்டார்கள்." அந்த சந்தா சாய புடைய சினேகிதன், மகமதரப்' பென்கிறவன், ஒரு பெரிய சறதார், ரெண்டா யிரம் மூவாயிரங்குதிரை அஞ்சானை' கொஞ்சம் பாற்' இதுகளோட கூட தான் பிறத்தேகமாய் ஒருதன் ஆசறாவிலு மில்லாமல் புதுச்சேரியில் வந்து பிறாஞ்சுக்காறருடைய கும்மக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு தேசம் ஒரட்டுக்கும் கொள்ளையடித்துக்கொண்டு றாமாறு" உடையார் பாளையத்துக் காட்டில் பதுங்கி இருக்கிறதும் இப்படிக்கு சல்லியம் பண்ணிக் கொண்டு வந்தத்தினாலே தஞ்சாவூர் சீர்மை திருச்சினாப்பள்ளி முதலான சீமை றொம்பவும் காபிறா வாச்சுது. அப்போ,பிறதாப'சிம்ம றாஜா தன்னுடைய கில்லேதார் மல்லாற்ஜி காடேராவ் மான்ோஜிராவை கொஞ்சம் சேனைகளையும் அனுப்பிவித்தார். இவாள் ஒருமாசம் வரைக்கும் அவாளை பின் துடர்ந்து கடசியிலே திருக்காட் டுப்பள்ளிக் கோட்டை சமீபத்தில் அந்த மஹமது அரப்" பென்கிறவனை மடக்கிக் கொண்டு அவனுடைய ஆனை குதிரைகளைப் பிடுங்கிக் கொண்டு அவன் கிட்டயிருந்த சுலுப்புகார்’ யென்கிறபிருது கொடியுடனே" இன்னும் அவனண்டையிலிருந்த பிருதுகளை பிடுங்கிக்கொண்டு அந்த மஹமது அரப் பென்கிறவனையும் அவன் சேனைகளையும் கொண்னு போட்டார்கள். அப்போ பிறதாப சிம்ம றாஜா மகா சந்தோஷமாக அந்த பிருதுகளை மல்லாற்ஜி காடே றாவுக்கு கொஞ்சம் மானோஜி றாவுக்கு கொஞ்சமாகக் கொடுத்து விட்டார்.

தீவு கோட்டை' வாங்கிற நிமித்தியம் இங்கிலேசுகாறருடைய சேனை கொஞ்சம் வந்து அதைப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த தீவு கோட் டையை பிடித்துக் கொண்ட காரணம் என்ன வென்றால் தீவுக்கோட்டை

74. “Chanda Saheb, taken a prisoner, was carried off to Satara” (Rajayyan, Page 26) * 75. மகமதாப் - மகமதமகாப் (டி3119); முகம்மது அரபு (போ. வ. ச. பக். 95) 76. அஞ்சானை - ஐந்து யானை (போ. வ. ச. பக். 95) 77. பாற் - பார் (டி:119); துப்பாக்கியாட்கள் (போ. வ. ச. பக். 95) 78. தான் பிறத்தேகமாய் ஒருதன் ஆசறாவிலு மில்லாமல் - தன் சொந்த முறையில் வெளிக் கிளம்பி (போ. வ. ச. பக். 95) 79. றாமாறு - இராக்காலத்தில் (போ. வ. ச. பக். 95) 80. மஹமது அரப் - முகம்மது அரபு: அந்த அராபியரை (போ. வ. ச. பக். 95). முகம்மது துகாப் (டி3119) -- 81. சுலுப்புகார் - ஜுலுப்கவர்கான் (போ. வ. ச. பக். 95) 82. பிருது கொடியுடனே - வீர விருதையும் (போ. வ. ச. பக். 95) 83. தீவு கோட்டை- தேவிக்கோட்டை கொள்ளிடம் கடலில் சேருமிடத்தில் வோக அமைந்துள்ளது. “The fort of Devikottai (at the mouth of the Coleroon) was about a mile in circumference, with walls 18 feet high and was flanked at unequal in

tervals by projecting towers, some circular and some square”- (Srinivasan, Page 263) * -