பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தஞ்சை மராட்டிய

பேரில் தீவு கோட்டை யிங்கிலிசுக் காறருக்கு கொடுத்தது. தனளசல்க வருஷம்."

அதுக்குமேல் அயிதராபாதுலே யிருந்து பெரிய நிஜாம் காஜதிகான்" யென்கிறவன் தெற்கு பிறாந்தியத்து சேதி கேழ்விப்படுகிறதில் சந்தாசாயபு என்கிறவன் தொஸ்தல்லிகா" னுடைய பிள்ளை சப்த்தற்அல்லிகான்" முதலான வர்களைச் சேர்த்துக் கொண்டு பிறாஞ்சுக்காறரை சினேகம்பண்ணி அவர்க ளுடைய கும்மக்கும் வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளி றாச்சியம் செயிச் சான். அதை ஸாஹ- றாஜா கிட்ட யிருந்து றகோஜி போசலே பத்தே சிங்கு இவாள் தஞ்சாவூர் ராஜாவுக்கு குமக்காக போயிருந்தவர்கள் அவாள் திருச்சி னாப்பள்ளி றாச்சியத்தையூம் பிடித்து சந்தாசாயபுவையும் பிடித்துக் கொண்டு கெடியிலே கொண்டு வந்து போட்டார்கள். இதெல்லாம் கேழ்விப்பட்டு திருச்சி னாப்பள்ளியிலே பாறச்சாயி கொடி பறந்ததை நாம் உயிரோடே இருக்கச்சே அதை யிறக்கிப்போடுகிறது யுக்த்தமல்ல வென்று ஸாஹூறாஜாவுக்கு சினேக மூல மாய் காகிதமெழுதி அவர் அனுமதியினாலே எண்பதினாயிரம் சுவரா வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். திருச்சினாப்பள்ளி கோட்டை யில் முறாரிறாவு பேரிலே ஆறுமாசம் வரைக்கும் றாசகாரியம் பண்ணி முறார்ஜி கோற்படேக்கு கவுலும் குடுத்து” வெளியிலே அழைப்பிவித்து அனுப்பிவிட்டு திருச்சினாப்பள்ளிக் கோட்டையும் ஆற்காட்டு சுபா அதிகாரமும், அனவற்தி கான்' என்று கூட வந்து இருந்தார், அவர் பாரிசம் பண்ணி தாம் அயிதறா பாதுக்கு போயிவிட்டார்." +

ஆற்க்காடு சுபாவும் திருச்சினாப்பள்ளி நாச்சியமும் அதிகாரம் அனவற் திகா னானபடியினாலே அவர் பிள்ளை மாபோசுகான் என்கிறவன் ஆற்க் காட்டு சுபையைச் சேர்ந்த தஞ்சாவூ ரானபடியினாலே தஞ்சாவூர் மாச்சியத்

88. கி.பி. 17 19 =

அ9. அாஜதி கான் - காதல் சாதிகான் JfI I9J, ாஜகோன் (போ. வ. ச. பக். 97). பெரிய நிஜாம் శి; நீரோ இது ils = 纥 பக். },”: நிஜாம் உல் முல்க் என்று பெயர். so. “Subordinate to the Nizam was the province of the Carnatic under a deputy or nabob, having the seat of his government at Arcot. Daud Khan had been first entrusted with its governance and when he, in 1710, was withdrawn to the province of Guzarat, one Sadatulla was left to officiate. This he did until his death in 1732, when his nephew Dost Ali assumed the administration of the province, but without applying for the sanction of his superior, the Nizam"-(Dt. Manual, N.A., Page 48) 91. சப்த்தற் அல்லிகான் -Safdar Alikhan; பதர்அலிகான் (போ. வ. ச. பக் 97) 92. கவுலும் குடுத்து - கவுலின்பேரிலே (டி5119) தந்திரமாக (போ. வ. ச. பக். 97) 93. அணவர்திகான் - இவருக்கு Anwaru'd-din என்றும் பெயருண்டு 94. “The success of the Marathas greatly perturbed the aged Nizam and he personally undertook an expedition to the south in order to settle matters. When the Nizam arrived with a large army at Arcot in March 1743 all the chiefs of the country promptly submitted to him, while Murari Rao was ordered to quit Trichinopoly and Anwaru'd-din was made the Nawab of Arcot”- (Srinivasan, Page 254-5)