பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

111

 III

துக்கு பேஷ்க்கவு" வரவேணுமென்று சபாபு சால பண்ணினான்." அப்போ பிறதாப சிம்ம மஹாறாஜா கொஞ்சம் கணக்குப்படிக்குத் தள்ளிக் கொடுக்க வேணு மென்கிற பிறசங்கத்தை ஞாயதாகச் சொல்லி அனுப்பிவித்தத்துக்கு அவனுக்கு அது தோணாமல்" மாபுசுகான்" தன்னுடைய சேனையுடனே" சண்டைக்கு வந்தான். அப்போ பிறதா பசிம்ம றாஜாவும் தம்முடைய தளத்தை அனுப்பிவித்தார். யிருவருக்கும் தஞ்சாவூர்க் கோட்டைக்கு வடபாரிசத்திலே காதவழிக்கப்பாலே" நல்ல சண்டையாச்சுது. அப்போ மாபூசு கானுடைய சேனைகள் நிற்கமாட்டாமல் பாளையம் சின்னாபின்னமாய்ப் போய் மாபூசு கான் அபசெயப்பட்டு ஒடிப்போய்விட்டான்." அப்போ பாளையத்திலே யிருந்து அகப்பட்டுக் கொண்ட மனுஷியாளுக்கு றொம்பவும் ஆதரணைபண்ணி மறுபடியும் மாபூசுகான் கிட்ட அனுப்பிவிட்டார்."

அப்பால் மாபூசுகான் அபசெயத்தை அடைந்த விதனத்தை தன் தொகப் பன் அனவற்திகானுக்குத் தெரியப்பண்ணினான். அப்போ அனவற்திகான் யோசனைபண்ணினது: தஞ்சாவூர் மஹாராஜா யுக்தமாயிருக்கப்பட்ட சால்சாபு தான் சொல்லி அனுப்பி வித்தார். அதை மாபூசுகான் நன்றாய் யோசனை பண்ணிப் பாராமல் ஆத்திறப்பட்டு" உயித்தத்துக்கு போனபடியினாலே அப செயத்தை அடைந்தான். ஆகிலும் பாச்சாயியுடைய தளம் பின்வாங்கிப் போச்சு தென்று' யிரிவுையைப் பத்தி' அனவற்திகான் பெகுசேனைகளை சவாற்."

95. பேஷ்கஷ் - வரி - Tribute; பேஷ்கிஸ்திப்பணம் (டி3119)

96. சபாபு சால பண்ணினான் - சவாபு சலாம் பண்ணினான் (டி5119); அதிகார முறையில் சொல்லியனுப்பினார் (போ. வ. ச. பக். 97)

97. ஞாயதாக - வாசிபாக (டி3119), உசிதமென்று (போ. வ. ச. பக். 98) 98. அவனுக்கு அது தோணாமல் - அதைப்பற்றி யோசிக்காமல் (போ. வ. ச. பக். 98) 99. மாபுசுகான் - Mahfuz Khan, இவர் அணவாருத்தினின் மூத்த மகன் - (The Maratha Supremacy, Page 321) 100. சேனையுடனே - பவுசுடன் (டி3119) 101. காத வழிக்கப்பாலே - இரண்டு மைல் தூரத்தில் (போ. வ. ச. பக். 98) 102. மாபூசுகான் தோற்ருன் என்று இங்குக் கூறியிருக்கத் தஞ்சை மாவட்ட மானுவல் (பாகம் W பக்கம் 779 இல்) தஞ்சையரசர் தோற்ருர் அதாவது நவாபுவென்ருர் என்றிருக்கிறது:

In two letters the Nawab speaks, in boastful language of victories gained by his troops over those of the King of Tanjore in two separate battles. In the first of these conducted by his eldest son Maphuz Khan the Tanjorean army consisted of 5000 horse and 30000 foot composed of natives of Balghat

and other countries and the loss by Tanjore amounted to 200 men killed and 400 wounded and about forty taken prisoners"

103. இந்த வாக்கியம் போ. வ. ச. வில் இல்லை 104. ஆத்திரப்பட்டு - அவசரப்பட்டு (போ. வ. ச. பக். 98)

105. அங்கு அடுத்து "இருக்கக்கூடாது என்று' என்ற சொற்கள் போ. வ. ச. பக். 98இல் உள்ளன == 106. பீரிஷையைப்பத்தி - பொறாமையடைந்து (போ. வ. ச. பக். 98)

107. சவாற் - சுவரா (டி3119), குதிரைப்படை (போ. வ. ச. பக்.98)