பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

113



முன்னாலே றாகோஜி போசலேயும் பத்தேசிங்கும் திருச்சினாப்பள்ளி மேலே சண்டைக்கு வந்திருந்தார்கள். அப்போ சந்தாசாயபுவை பிடித்துக் கொண்டு' கெடியின் பேரிலே போட்டு வைத்து வயணம் எழுதி யிருக்குதே அந்த சந்தா சாயபுவை அழைப்புவித்து உன்னைவிட்டு விடுகிறோம் நீயெங்கே வோனுமோ அங்கே போய்விடு ஆனால் தஞ்சாவூர் ஹாட்சியம் நம்முதானபடி யினாலே அந்த வழிக்கு நீ போகத் தேவையில்லை எண்ணு' அவன்கிட்ட யெழுதி வாங்கிக்கொண்டு பிறமானமும் வாங்கிக் கொண்டு அந்தச் சந்தா சாயபுவை விட்டு விட்டார்கள்." அவன் அவடம் விட்டு பிறப்பட்டு ஆதவானி யிலே யிருக்கும்" யிறாசத் மோதீன்கான் கிட்ட போயி அவனுடனே பேசிக்கொண்டு இருவத்தய்யாயிரம் சவார். அதுக்குத் தக்க பாற தோப்பு கானா' முதலான சன்னாகத்துடனே இறாசத் மோதின்கானை சந்தா சாயபு டனே கூடதெக்ஷணை பிறாந்தியத்துக்கு வருகிற சமையத்திலே பிறாஞ்சுக் காரருக்கும் கடுதாசி அனுப்பிவித்து சவவிதானம்' பண்ணிக்கொண்டு அவர்களுடைய கும்மக்கும் கூடவாங்கிக் கொண்டு ஆற்காட்டு சுபேதார் அனவற்திகானை அடித்துப்போட்டு ஆற்காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்."

அப்போ ஆற்காட்டிலே யிருந்த மமுதலிக்கான் ஒருத்தருக்கும் தெரியா மல் பிறப்பட்டு நாகபட்டணத்துக்குப்போய் ரெண்டு மூணு நாளங்கேயிருந்து

-

சிறப்பாகப் போர்புரிந்தார் என்றும், கலியுக பீஷ்மர் என்று பேரடைந்தார் என்றும் திருமுடி சேதுராமன் சுவடி (பக். 336 - 37) கூறும்.

117. “Trichinopoly was taken on 26-3-1741 and Chanda Sahib was captured and imprisoned” - (The Maratha Supremacy, Page 180) 118. எண்ணு - இது டி3119இல் இல்லை; என்று (டி3762) 119. “Chanda Sahib was released in 1748 on a payment of seven lakhs of rupees" - (Srinivasan, Page 255) - 120. 'ஆதவானியிலே யிருக்கும்' என்பது போ. வ. ச. வில் இல்லை (பக். 99). (ஆதவானிஆதோணி)

121. பிறாசத் மோதின்கான் - ராஸ்த் மோஹிதீன்கான் (போ. வ. ச. பக். 99). இவர் உதவி யைக் குறிப்பிடாமல், நிஜாமின் பேரன் முசஃபர்ஜங் (Muzaffar Jang) உதவி கிடைத்தது என்பர் வரலாற்றாசிரியர்கள்.

“The rival claimant to the subhadarship, Muzaffar Jang, joined Chanda Sahib”-(Srinivasan, Page 256)

122. சவார் - சுவரா (டி3119); காலாட்படைகள் (போ. வ. ச. பக். 99) 123. பாறதோப்புகானா - பீரங்கி (போ. வ. ச. பக். 99)

124. சவவிதானம் - உடன்படிக்கை (போ. வ. ச. பக். 99)

125. “At Ambur (1749) they defeated Anvaruddin and marched to Arcot" -(Srinivasan, Page 256)

“Before he (Anwar-ud-din) reached his intended victim, a bullet from a passing French battalion struck him and he fell dead on his howdah"(District Manual, N.A., Page 55)

128. மமுதலிக்கான் - முகம்மது அலி; இவர் அணவாருத்தின் மகன் ஆவர்