பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

115

 II5

என்று ஒருதி; அவள் கெற்பத்திலே றாமசுவாமி' கிஷ்ட்டண சுவாமி யென்றும் ரெண்டு பிள்ளைகள் பிறந்துது. ஆனால் அவாள் செம்மையான மாற்கமாய் பிறவாமல் விஹிஜிதமாகப் பின் வழியிலே' பிறந்தவர்களென்று லோக' வசந்தையாக யிருந்தது. அதில் சின்ன பிள்ளை கிஷ்ணசுவாமி என்கிறவன் சில நாளிருந்து அப்பால் தெய்வகதி யானான். மூத்த பிள்ளை றாமசாமி என் கிறவ னிருந்தான். அவனுக்கு அமறசிங்கென்று வசந்தை யாச்சுது."

இந்த மேலெழுதிய காரியம் நாலும் அஞ்சாறு வருஷம்" முன்பின்னாய் நடந்து இருக்கும்; தெரிய வேண்டியதாக எழுதினேன். அப்பால் நடந்த சேதி கள்: இறாசத் மோதீன் கான் சந்தாசாயபுடனே கூட தெற்கு பிறாந்தியங்களை சாதிக்கிற நிமித்தியம் பிறப்பட்டு புதுச்சேரி மாற்கமாய் திருச்சினாப்பள்ளிக்கு போறவாள்: பிறதாப சிம்ம றாஜாவை சேனைகளுடைய சிலவுக்கு கொஞ்சம் கேட்டு அனுப்பிவித்தார்கள். மஹா ஹாஜா அவர்கள் நவாபு மமுதல்லிகானுக் கும் நமக்கும் சினேகம் விசேஷமானபடியினாலே அவருடைய சத்துருவுக்கு நாம் கும்முக்கு பண்ணுகிறது. செம்மையல்ல வென்று நிராகரித்துப் போட்டார். அந்த கோபத்தினாலே இறாசத் மோதீன்கானும் சந்தாசாயபும் தஞ்சாவூர் மேல் வந்து இறங்கி கோட்டையை சுத்திக் கொண்டார்கள் .* அப்போ மஹா றாஜாவுடைய சேனைகளும் வெளியிலே பிறப்பட்டு ரெண்டு மூணு சண்டை நல்ல சண்டை போட்டார்கள். சந்தாசாயபு முதலானவர்கள் ரெண்டு முனுதிரம் கோட்டையை யிடிச்சு அல்லா பண்ணினார்கள்." மஹா ஹாஜா பிடிந்து போனத்தை உடனுக்குடனே செம்மை பண்ணி எந்தெந்த வேளையிலே வந்து விழுந்தார்களோ அந்தந்த வேளையிலே சாகிறதையாக யிருந்து தம்முடைய சொந்த சாமாற்த்தியத்தினாலே துரத்திவிட்டார். இதினாலே சந்தாசாயபு முத லான சற்தார்கள் அபசெயப்பட்டு, கொஞ்சம் சண்டை போடுகிறது, கொஞ்சம்

138. அமர்சிங்கின் தாய் பெயர், அமர்சிங்கின் இயற்பெயர் ஆகியவை திருமுடி சேதுரமான் சுவடியில் இல்லை.

139. விஹிஜிதமாகப்பின்வழியிலே - ஒழுங்கற்ற முறையில் (போ. வ. ச. பக். 194) 140. லோகவசத்தை - ஊரில் வதந்தி (டிெ)

141. வசந்தையாச்சுது - வழக்கத்தில் வந்தது (போ. வ. ச. பக். 191) அமர்சிங்கு பிறந்ததி சகம் 1872 (கி.பி. 1750) (திருமுடி. பக். 320)

142. அஞ்சாறு வருஷம் - ஏழு அல்லது ஐந்து வருஷங்கள் (போ. வ. ச. பக். 191)

143. “Dupleix.......... proposed to Chanda Sahib that he must next attack Trichinopoly wherein Muhammad Ali had taken refuge... and left Pondicherry on 28th October 1749 towards Trichinopoly” - (Srinivasan, Page 256)

144. “On December 13 (1749), the combined forces of Chanda Sahib and Muzaffar Jung crossed the Coleroon into the Tanjore Kingdom and in a few days reached Tanjore which they began to siege"-(Srinivasan, Page 257)

15. அல்லா பண்ணினார்கள் - நாசம் செய்தார்கள் (போ. வ. ச. பக். 101), அல்லா - வருத்தம் (Tamil Lexicon M.U.)