பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

119



மாக மானாஜிறாவு அவருக்குச் சொன்னார். அதை மேஜர்" கேட்டு பீரங்கி யிருக்கிற விடத்தில் வந்து தன் கையினாலே பீரங்கியை சிமாறாக குறிப்புப் பண்ணி நாலஞ்சு திரம் சுட்டார். அதிலே ஒரு குண்டு போய் அவுதாவிலே உளுக்கார்ந்திருக்கிற ஆலம்புகானுடைய கழுத்திலேபட்டு தலை தெறிச்சுது. உடனே தஞ்சாவூர் குதிரை சவார்கள் ஆலம்புகான் சேனைகள் பேரிலே விழுந்து அடிக்குறபோது செண்ணுபோனது போக மீதியான சேனைகள் சின்னாபின்ன மாக போய் விட்டுது. கொஞ்சம் சேனைகள் அகப்பட்டுக் கொண்டத்தை பிடித் துக்கொண்டு மானாஜிறாவண்டையில் வந்து சேர்ந்தார்கள். இந்தப் பிறகாரம் முதல் ஜெயம் மமுதல்லிகானுக்கு தஞ்சாவூராராலே கிடைச்சுது.

அதின் பிற்பாடு மமுதல்லிகானுக்கும் சந்தாசாயபுக்கும் சண்டை வெகு நாள் வரைக்கும் வேளந்துது. பூiறங்கம் திருச்சினாப்பள்ளிக்கும் காவேரி ஆற்று நடுவிலேயிருக்கிற படியினாலே" காவேரி ஆத்தின் வடகரையில் சந்தாசாய புவைச் சேர்ந்த பிறாஞ்சுக் காறருடைய மோற்ச்சாபோட்டு இந்தப்பிறகாரமாக சண்டையாய் கொண்டு வந்தது. அப்போ மைசூர் நந்திராஜா முறாஜிகோற் படே மானோஜிராவு செகதாபு இவாளனைவரும் சந்தாசாயபுடைய பாளை யத்துக்கு ஒருதானியம்" போகவொட்டாமல் நாலுபக்கமும் சுத்திக்கொண்டு நிற்பந்தம் பண்ணினபடியினாலே சந்தாசாயபுக்கு சிலவுக்கு மில்லாமல் றஸ்த்து மில்லாமல் சேனைகளோரட்டுக்கும் தத்தளித்து மோசம் பண்ணின சமையத்தில் சந்தாசாயபு பிறப்பட்டு போகவேணுமென்றாலும் ஒரு பக்கமும் வழியில்லாமல் தன்னுடைய சேனை தன் சுவாதீனமில்லாமல் சந்தாசாயபு பண்ணின யோசனை: நான் பண்ணின பிறையெத்தினங்களில்" ஒண்ணாகிலும் வாய்க்காமல் போச்சுது இவ்விடம்விட்டு ஆரண்டையாகிலும் போவோமென்றாலும் வழியில்லை. நல் லது. போவோமென்றால் தன் சேனைகள் விடாது; பிறத்தியாருடைய சேன்ை களும் சூழ்ந்து கொண்டிருக்குது; தம்முடைய சேனையே நாளையிறத்தினம் அல்லது நாளை நண்ணைக்குள்ளாக" நம்மைப்பிடித்து மமுதல்லிகானண்டை யில் ஒப்புவித்து போடுவாள்; மமுதல்லிகானுடைய தொகப்பனை நாம் அடித் திருக்கிறபடியினாலே " அந்தப்பழியை வாங்குவான்; ஆகையால் தஞ்சாவூரார் நல்லவாள்; சொதுசூறாள்; அவாளண்டையில் போய் சேர்வோமென்றால், அவாளாகிலும் நம்மை ரெஷ்சிப்பார்களா என்றால், அவர்களும் ரெட்சிக்க மாட்டார்கள்; ஏனென்றால் ஆதி முதல்க்கொண்டு நாம் அவாள் சினேகம் வைக்கவில்லை; இதுவுமல்லாமல் மஹாஷருக்கு தஞ்சாவூர் வழிப் போறதில்லை

184. மேஜர் - மேதர் (போ. வ. ச. பக். 104): இராணுவ அதிகாரி

165. காவேரியாற்று நடுவிலே யிருக்கிறபடியினாலே - 'நடுவிலே காவேரியாறு இருக்கிற படியி னாலே" என்று மாறிப்படிக்கலாம்.

166. பாளையத்துக்கு ஒரு தானியம் - சைனியத்தை ஒரு வழியிலும் (போ. வ. ச. பக். 1990 167. பண்ணின பிறையெத்தினங்களில் - நினைத்த எண்ணங்களில் (போ. வ. ச. பக். 194)

168. நாளையதினம் அல்லது நாளை நண்ணைக்குள்ளாக - இன்னும் இரண்டுநாளில் (போ. வ. ச. பக். 105)

169. அடித்திருக்கிறபடியினாலே - கொன்றிருக்கிறேன் (போ. வ. ச. பக். 109