பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தஞ்சை மராட்டிய



என்று பிறம்ாணம் பண்ணிக் கொடுத்துப்போட்டு வந்து, இப்போ தஞ்சாவூர் மேலே சண்டைபண்ணினபடியினாலே அவாள் நம்மை எப்படி ரெட்சிப்பார்கள்; இதுவுமல்லாமல் மமுதல்லிகானும் இங்கிலீஸ்காறரும் அவாளுக்கு றொம்ப சினேகமாயிருக்கிறார்கள்; அந்த சினேகத்தினாலேயும் நம்மை ரெட்சிக்க மாட்டார்கள்: நல்லது; நாம் நம்மை சீவனோடே மமுதல்லிக்கு ஒப்புக் கொடுக் கப்பட்டு பிறானனை யிழந்து போறத்தைப் பார்க்கிலும், தஞ்சாவூரா ரண் டையிலே போய் அவாள் கையினாலே கொல்லப்படுகிறது தாவிளை" யென்று நிச்சயம் பண்ணி அற்த றாத்திரியிலே ஒருதருக்கும் தெரியாமல் ஒரு குதிரைமே லேறிக்கொண்டு ஒரு மனுஷனைக் கூடக் கூட்டிக்கொண்டு தஞ்சாவூர் பாளை யம் திருச்சினாபள்ளிக்குக் கிழக்கே காவேரிக்குத் தெற்கே யிறங்கி யிருந்துதே அந்த பாளையத்திலே வந்து சற்தார் மானாஜிறாவுக்கு றகசியமாய் சொல்லி அனுப்பிவித்தான். அப்போ மானாஜிறாவு தனியே வெளியிலே வந்து சந்தா சாயபுடனே கண்டு பேசினது: நீர் யேன் வந்தீர்; உம்மை ரெட்சிக்க நம்மாலே யெந்தவிதத்திலேயு மாகாது; யெங்கள் மகாறாஜாவுக்கு உம்முட பேரிலே றொம்பவுங் கோப மிருக்கிறபடியினாலே உம்மை னான் ரெட்சிக்க மாட்டோம்; உமக்கு சிலவுக்கு வேணுமென்றால் கொடுக்கிறேன்; உம்முடைய பாளையத்துக் குப் போய் சேரும்; அங்கே போக மனதில்லாவிட்டால், விசுவாசமுள்ள மனு ஷனை கூட்டுகிறேன்; இவடம் விட்டு தெற்கு பக்கத்திலே மகாகாடு யிருக்குது: அங்கே போய் அப்பாலே யெங்கே போகவேனுமோ அங்கே போகலாம்: யில்லையென்று இவடம்விட்டு உடையார்பாளையத்துக் காட்டுக்குப் போய் சேர்ந்து அப்பாலே வேட்டை வல்லம் 11 திருணாமலை " காட்டுவழியே போகலாம்; உமக்கு சரிபோனபடியே செய்யுமென்று சொன்னத்துக்கு, சந்தா சாயபு சொன்னது; இதுகளெல்லாந் தெரிந்துதான் வந்தேன்; நீர் பண்ணுகிற உபகார மென்னவென்றால் மமுதல்லிகான் கையிலே உயிரோடே மாத்திரம் ஒப்புவிக்காதேயும்; அப்படி ஒப்புவிக்கத் தக்கனையான அவசரம் விழுந்தால்’’’ உம்முடைய மனுஷன் கையினாலே கொண்ணுபோடும்; இவளவு அவையம்' கொடுமென்று கேட்டார். அப்போ மானோஜி றாவு அவனுக்கு சீவனோடே ஒப்புவிக்கிறதில்லை யென்று பாவசங் கொடுத்து அவனுக்கு பிறத்தியேகமாய் இடம்பண்ணிக் கொடுத்து ரகசியமாய் வைத்து அந்த னாழிகைக்கு தஞ்சா வூருக்கு நடந்த சமாசாரங்களை யெல்லாம் சவவிஸ்தாரமா யெழுதி அனுப்பி வித்தார். அதுக்கு பிறதாபசிம்ம ஹாஜா உத்தரவு யெழுதி அனுப்பிவித்தது:

170. தாவிளை - நன்று (போ. வ. ச. பக், 106)

171. வேட்டைவல்லம் - வேடவல்லம் (போ. வ. ச. பக். 108)

172. திருணாமலை - திருவண்ணாமலை

173. அப்படி ஒப்புவிக்கத் தக்கனையான அவசரம் விழுந்தால் - அப்படி நேரும் பசுத்தில் (போ வ. ச. பக். 108) o

17 . இவளவு அவையம் - இந்த அபயம் (போ. வ. ச. பக். 107) 175. பாவசம் - அபயம் (போ. வ. ச. பக். 107)