பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

123



றுட்டி திருவாதி' கிட்ட நவாபுடைய பல்லாக்கு மேலே வந்து விழப் போனார் கள். அப்போ கிட்டயிருந்த மனுஷியாள் துபாக்கியினாலே சுட்ட போது முறார்றாவு தம்பி புஜங்கறாவும் அவன் மருமகனும் விழுந்து போனார்கள். நவாபு அப்பால் பிறப்பட்டு போய்விட்டார். இந்த சேதி முறார்றாவுக்குத் தெரிந்தவுடனே றம்பவும் விதனமாய் தம்முடைய சேனைகளுடனே சொந்த தேசம் குத்திக்குப்" போய் விட்டார். நந்திறாஜா" உபைய காவேரி தீரத்தை ஆக்கிரமித்துக்கொண்டு சிறுது நாள் செம்புகேசுவரம்" பிறாந்தத்திலே யிருந்தி அப்பால் பூரீறங்கபட்டணத்துக்கு பிறப்பட்டு போய் விட்டார்.

அப்பால் பிறதாப சிம்ம மஹா ஹாஜா தம்முடைய பிள்ளை துளஜா மஹா ஹாஜாவுக்கு மாடிக்கு வீட்டுப் பொண் றாஜ குமாரபாயி சாயபுவை ரெண்டாவது கல்லியாணம் பண்ணிவைத்தார். உடனே நாலஞ்சு மாத தையிலே' மொத்தே பொண் மோகனாபாயி சாயபுவை மூணாவது கல்லி யாணம் பண்ணிவைத்தார்.--

191. திருவாதி - திருவதிகை 192. குத்தி - Gooty 193. நந்திராஜாவை நஞ்ச ராஜா எனவும் சொல்வர்

194. செம்புகேசுவரம் - ஜம்புகேசுவரம் - திருவானைக்கா 195. நாலஞ்சுமாததையிலே - நான்கு ஆறுமாதத்திற்குள் (போ. வ. ச. பக். 109) _. இதற்கடுத்துப் பிற்கண்டவை போ. வ. ச. வில் அதிகமாக உள்ளன (பக். 108-111):

அதன்பிறகு மகாராஜா தன் சேனாதிபதியான மானாஜி ராயரைத் தகதின பிராந்தியத் திற்கு அனுப்பவேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டது. அது என்னவெனில் ராமநாதபுரத்து ஜமீன் தாரான மறவர் எப்போதும் மகாராஜாவின் பாதுகாப்பில் இருப்பவர். இருந்தபோதிலும் தற்சமயம் புதிதாக யெளவன தசையிலுள்ள அவருக்கு அதிகாரம் கிடைத்ததால் யெளவன மதத்தினால் கொஞ்சம் உதவியைத் தேடிக் கொண்டு, நவாப் மஹமத் அலிகானின் சிநேகம் தனக்குச் சாசுவத மானது என்று எண்ணித் தகதினப் பிராந்தியத்திலுள்ள மகாராஜாவின் ராஜ்யத்தில் சில கொடுஞ் செய்கைகளைச் செய்தார். மகாராஜாவும் இரண்டொரு தடவை மன்னித்துவிட்டார். பிறகு அவருடைய காரியங்களில் நவாபும் உள் கையாயிருப்பதை அறிந்தார். தகதின பிராந்தியத்திலுள்ள ராஜ்யம் எப்போதும் தஞ்சை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. மகாராஜா ராமேச்வர யாத்திரைக்குச் சென்றபோது, ராமநாதபுரத்துக்கு அதிபதியான வயது முதிர்ந்த மறவர் ஒருவர் இருந்தார். அவர் மகா ஹாஜாவுக்கு அநேக சேவைகளைச் செய்து, அவருடைய பிரிதிக்கு வசமானதின் காரணமாக, அந்தத் திருவாடநீரி ராஜ்யத்தை அவர் தாக்ஷண்யத்திற்காகக் கொஞ்ச காலம் அவரிடம் ஒப்படைத் திருந்தார். பிறகு, அந்த மறவரின் மகன், நவாபின் விஷமத்திற்கு வசமாய், மகாராஜாவின் ராஜ்யத்தில் துஷ்ட நடத்தைகளை ஆரம்பித்தபடியால் தன் சேனையையும் சேனாதிபதியையும் தென்திசைக்கு அனுப்பக்காரணம் ஏற்பட்டது. அப்போது மானாஜிராவ் சேனையுடன் சென்று சண்டை செய்து, ஹநுமந்தகட். வரூர், மங்கள், குவடி என்ற கோட்டைகளைச் சின்னா பின்ன மாக்கி வசப்படுத்திக் கொண்டு, திருவாடநீர் பிராந்தியத்தையும் ஜயித்து ஆர்முக்கோட்டைக்கு எச்சரிக்கை செய்து யுத்தம் நடத்தினார். ராமநாதபுரத்து அதிபதியும் வகுக்ர கோட்டையில் இருந்து சண்டை செய்தார். அதே சமயத்தில், மகாராஜாவும், ஆர்முக் கோட்டையை விட்டுவிட்டு, வேறு காரியமாய்த் தஞ்சைக்கு வரும்படி மானாஜி ராயருக்குக் கடிதம் அனுப்பினார். மானாஜி ராவும் ஆர்முக் கோட்டையை வசப்படுத்தாமல் திருவாடநீரி பிராந்தியத்தையும் தான் ஜயித்த மற்ற இடங்களையும் பந்தோபஸ்து செய்துவிட்டுத் தஞ்சைக்கு வந்தார். m

இந்தச் செய்தியை, நவாப் மஹமத் அலிகான் அறிந்து, மகாராஜாவுக்கு எச்சரிக்கை செய் வது யுக்தமில்லை என்று கி.பி. 1782இல் ஆங்கிலேயரின் சர்தாரான மாஸ்டர் ஆப்ரி என்பவருக்குக் கடிதம் எழுதினதாவது:- திருச்சினாப்பள்ளி பிராந்தியத்தில் இருக்கிற மறவரின் ராஜ்யத்திலுள்ள அனுமந்தகுடி முதலான ஏழு கோட்டைகளை மகா ராஜா வசப்படுத்திக் கொண்டார். இது மாத்திரமில்லை. கர்னல் க்ளியூ என்பவர், கர்னல் ஹர்நாநாதா என்பவரால் எழுதப்பட்ட ஆங்கிலே