பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தஞ்சை மராட்டிய



சுதறமுருகு பஷ்சி யென்று சொல்லப்பட்டது; அது உயரம் ஒண்ணரை ஆள் உயரம், அதினுடைய கால் ஒண்டையைப் போலிருக்கும், இப்படிக் கொத்த அபறுபக்குருவியை அனுப்பிவித்தார்.

அதுக்குப் பிற்பாடு துளஜா மகாறாஜா நாலஞ்சு வருஷம் மட்டும் தம் முடைய தொகப்பனார் எப்படி நடப்பிவிச்சுக் கொண்டு வந்தாறோ அப்படியே தம்முடைய யோக்கிய பரிவாரங்களை யெதாயுக்த்தமாய் நடப்பிவித்துக் கொண்டு: நவாபு மமுதல்லிகானுக்கும் சந்தோஷம் வரத்தக்கதாக, மதுரையிலே யிருந்த கும்மந்தான் மஹமது யிசூபுகான் மேலே ஒருதிரம், அயிதர் நாயக்கன் பேரிலே பெங்களுர் மட்டும் ஒருதிரம், யிந்தப்படி நவாபு ஹாஜகாரியம் பண்ணபோது, மதுரை கும்மக்கு அருணகிரி அப்பாவையும், வெங்கிட்டறாவு காடெக்கு அயிதர் சீர்மை பேரிலே பொனத்துக்கு கும்மக்காக அனுப்பிவித்து, நவாபு முதல்க் கொண்டு மைத்த றாஜாக்களும் சிலாக்கியம் பண்ணத்தக்கதாக றாச்சியம் பண்ணிக்கொண்டு வந்தார். அப்பால் தம்மை வெகுநாளாய் அனுசரித்துக் கொண்டிருந்த உசேன்கான்சூருக்கு பெரிய மனுஷன் பண்ண வேணுமென்கிற அபேஷ்சையினாலே அவனுக்கு மந்திரி தினம் குடுத்தார். அப்போ ஆற்காட்டு பிறாந்தியத்தின் மேல் அயிதரல்லிக்கான் சண்டைக்கு வந்திருந்தான். அவன் தஞ்சாவூர் சீர்மைக்கும் வந்து திருமுல்லைவாடி" யிலே வந்து இறங்கி மஹா றாஜாவுடனேயும் சவாபு சால பண்ணி மஹா ஹாஜாவும் நாலு லெஷ்சம் விராகன் வரைக்கும் கொடுத்தார். அவனதை வாங்கிக் கொண்டு போய் விட்டான்." =

அந்த உசேன்கான்சூர் என்கிறவன் மெத்த றாச்சிய காறுபாறு" எந்த விதமாய் பண்ணினாலும் பிரதாபசிம்ம றாஜா முக்கியமாய் பண்ணியிருந்த காரியம் நவாபு மமுதல்லிகானுக்கு செலுத்த வேண்டிய பேஷ்கவி இங்கிலிசு காறர் முகாந்திரமாய் தஞ்சாவூர் பேஷ்கள் பணம் செல்லும்படியாய் பண்ணி யிருந்த திட்டத்தை இந்த உசேன்கான் சூர் துற்புத்தியினாலே' வெள்

சுதற முருகு - முதர் முருக் (போ. வ. ச. பக். 117) ஒண்டை - ஒட்டகம் 4. அபறுபக்குருவி - அபூர்வ பசு (போ. வ. ச. பக். 117) கும்மந்தான் - குமதின் (பே. வ. ச. பக். 117) திருமுல்லைவாடி - திருமலவாடி (போ. வ. ச. பக். 117), திருமழபாடி

. மஹா ராஜாவுடனேயும் சவாபு சாலபண்ணி - நவாபுக்குச் சவால் விடுத்தார் (போ. வ. ச. பக். 117)

8. “Tanjore did not escape the depradations of Haidar and in 1769, he made plundering raid into that country... The Raja got terrified and in order to save his peoples' lives he finished the affair with Haidar by paying a trifle (i.e. 4 lakhs of rupees and four elephants)- (Srinivasan, Page 294-95)

9. காறுபாறு - கார்பார் - கார்வார் - ஒரு அதிகாரி

10. பிரதாப சிம்மறாஜா முக்கியமாப் பண்ணியிருந்த காரியம் - முக்கியமான வேலைகள் எல்லாம் பிரதாபசிம்ம ராஜாவின் பேரிலே நடத்தப்பட்டது-(போ. வ. ச. பக். 117) o

11 *முதல் 12 வரை: 'விபரிதபுத்தி அதிகரித்து வந்ததினால் அவனால் நடத்தப்பட்ட ராஜ்ய