பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தஞ்சை மராட்டிய



யோக்கியத்தினாலே பிறபலமாவார்; அப்போ நமக்கு பாரமாயிருக்கும். ஆகை யினாலே யெந்த விதத்திலும் அவரை கையின் கீழே போட்டுக்கொள்ள வேணு மென்கிறத்துக்கு, இப்போ தோப்பா பணம் பாக்கியும் இருக்குது, அது கேழ்க்கிற நிமித்தியம் அதுக்குத் தக்கதாய் சேனைகளைச் சேர்த்து காரியத் துக்குத் தக்கதாய் தஞ்சாவூர் ராட்சியத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, றாஜா வையும் கைக்குள்ளாக்கிக் கொள்ள வேணும்; ஒரு வேளை தோப்பா பணம் கொடுத்துவிட்டால், னாள வட்டத்திலே ராட்சியத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, றாஜாவை நம்முடைய கையுங்கீழே வைத்துக்கொண்டிருக்கிறதே உத்தமமென்று நிற்செயம் பண்ணி, தோப்பா பணம் கேட்டு அனுப்பிவித்தான். அப்போ காலத்துக்குத் தக்கதாய் றாஜாவுடைய புத்தியை துற்மந்திரிகள் அபகரித்துக் கொண்டு நிராகரித்து ஒறதி உத்தாரம் யெழுதும்படியாய் பண்ணினார்கள். அதினாலே நவாபு மமுதல்லிகான் றாஜாவுடைய தொகப்பனார் பண்ணின உபகாரத்தை நினையாமல் ராஜ்(*யத்தின் பேரிலே திஷ்ட்டியை வைத்து) அதை அபகரிக்கிற பத்தியினா(*லே தம்முடைய மூத்த மகனான உமததுல் உமரா' உடனே தக்க சேனையும் குடுத்து) சண்டைக்கு அனுப்பிவித்தார். அவர் தஞ்சாவூர் கோட்டையை சுத்திக் கொண்டு உயித்தம் பண்ணினார். அப்போ துஷ்ட மந்திரிகளுடைய புத்தியை அனுசரித்து சண்டைக்கு ஆரம்பித் தார்கள். இவாளுக்கும் சண்டை போடுகிறத்துக்கும் சாமற்தயம் போராமல் மேல் ஒண்னும் நடவாதபடியினாலே சமாதானம் பண்ணிக் கொள்ள வேணு மென்று ஹாஜாவுக்கெச்சரித்தார்கள். அப்போ மஹாறாஜா பூற்வம் பெரிய வாள்" னாளையிலே யிருந்த சாமாதிகாள் ரெண்டொருத்தருடனே யோசினை பண்ணி சமாதானம் பண்ணிக்கொண்டு பாளையத்துச் சிலவுக்கு அன்பது அறு பது லக்ஷம் று.ாபாய் தீர்ப்புப் பண்ணிக் கொண்டு றொக்கம் நகை நட்டுகள் கொடுத்தது போக மத்தத்துக்கு பாதி சீர்மை மேலே அடமானமாக எழுதிக் கொடுத்துவிட்டார்." அதன் பிற்பாடு உமமதுல்லுமுறா தஞ்சாவூர்க் கோட் டைக்குச் சமீபமாய் மேர்க்குப் பாரிசம் வல்லத்துக் கோட்டையிலே தம்முடைய சேனைகளை வைத்துப்போட்டு நவாப்புக் கொடுத்திருந்த இளங்காடு சீமையும் தம்முடைய சுவாதீனம் பண்ணிக்கொண்டு’ தம்முடைய சேனையுடனே திருச்சி னாப்பள்ளிக்குப் போய்விட்டார்.

18. ராஜாவுடைய புத்தியை துற்மந்திரிகள் அபகரித்துக்கொண்டு - ராஜா துர்மந்திரிகளின் ஆலோசனைக்கு வசமாகி (போ. வ. ச. பக். 119) "பிறை வளைவுக்குள் இருப்பவை டி3762 நோக்கி யெழுதப்பட்டன 19. Umdut – ul - Umara Amir-ul-Hind Walajah 20. பெரியவாள் - தந்தை (போ. வ. ச. பக். 119) -- 21. “By the first settlement dated 20th of October 1771, Tuljaji agreed to pay eight lakhs of rupees as arrears of tribute... By the second settlement dated 25th Oct. 1771 the Rajah assigned the district of Mayuram and part of the district of Kumbakonam yielding an annual revenue of sixteen and a quarter lakhs of rupees for two years in lieu of the payment of 324 lakhs of rupees estimated as war indemnity”- (Rajayyan, Pages 61-62)

22. “As the possession of the fort of Vellum, the key of Tanjore was of