பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

139

 I39

பேரிலே" சண்டைக்கு வந்தவன், தஞ்சாவூர் கோட்டைக்கும் மேல்வந்து சண்டை போட்டான்; சீர்மை யெல்லாம் சப்த்தி பண்ணினான்". தஞ்சாவூர் றாச்சியத்திலே அப்போ ஒரு பெரிய பொல்லாத பஞ்சம்' வந்து தானியம் கொள்ளக்கிடையாமல் வெகு பிறசைகள் நித்தம் அறனுாறு எழுனுாறு இந்தப் படிக்கு செத்துப் போய்விட்டார்கள். அந்தச் சாமத்திலே மனுஷாள் மனுஷாளை கூட பட்சித்தார்கள். அத்தோடே அந்த rாமமும் கலாபமும் நிவாறணமாய் போச்சுது.

அப்பால் தம்முடைய சரீரம் இனிமேல் நிக்கமாட்டாதென்று நிச்சயமாய் தெரிந்த பிற்பாடு யோசனை பண்ணினது என்னவென்றால், தமக்குப் பிறந்த பிள்ளையும் பேரமாரும் நமக்கு முன்னுதாகத்தானே பரலோகத்தை அடைந் தார்கள். இப்பவும் நம்முடைய சரிகரம்' நிக்கமாட்டாது. நம்முடைய உத்திர கிறிகைக்கும் றாச்சிய பரிபாலனம் பண்ணுகிறத்துக்கும் யாரும் யோக்கியமாய் பாத்தியமானவன் இல்லாதபடியினாலே புத்திரன் வேனுமாகிலும் நம்முடைய தொகப்பனார் கேவலம் ஹாஜரிஷி பிறமாண வந்தார் வெகுகீற்த்தி சம்பாதிச்சு எல்லா உறமுறை சனங்களையும் அவாளுடைய யோக்கியத்துக்குத் தக்கதாய் அவாளை அங்கீகாரம் பண்ணி அவாள் தாங்களாய் தானே வந்து சேருகிறாப் போலே பண்ணிக் கொண்டார். ஆகிலும் துக்கோஜி ஹாஜா கல்லியாணம் பண்ணாதவள் கெற்பத்திலே இவர் பிறந்தவர் என்கிற ஒரு கலங்கம் நிண்ணு போய் விட்டுது. இப்போது அப்படிக்கு யாதொரு சப்த்தத்துக்கும்’ இடம் வராமல்படிக்கு யோசனை பண்ணி தம்முடைய சொந்த குலத்திலே சொந்த கோத்திரத்திலே தாயாதிகளுக்குள்ளே றுாபமாயும் குணமாயும் யுக்தமாயிருக்கப் பட்ட பிள்ளையை யுக்தப்படிக்கு தத்துவாங்கி சாதகம் கற்மங்கள்" முதலானது

=

ஒ8. பட்டனத்தின் பேரிலே - முதலிய நாடுகளின் பேரில் (போ.வ.ச.பக்.186)

6 . சண்டை போட்டான் சீர்மையெல்லாம் சப்த்திபண்ணினான் - சண்டையிட்டுத் தஞ்சாவூர் பிராந்தியம் முழுமையும் சூழ்ந்து கொண்டார் (போ. வ. ச. பக். 126)

“On the 20th July 1780 Haider Ali with a formidable army descended into the Carnatic Payenghat through the Chengamma Pass. Slowly extending his depredations, he crossed the Coleroon in May 1781 and entered the Tanjore Kingdom. He overran the entire country”- (Srinivasan. Page 307)

70. “Closely following this devastation, famine broke out in the Tanjore country...... Many thousands have died of want”- (Srinivasan, Page 308)

71. சங்கரம் - சரீரம் (டி3762) 72. பிறமானம் - போல் (போ. வ. ச. பக். 188) 73. சப்தத்துக்கு - பேச்சுக்கு (பே. வ. ச. பக். 120) 74. சாதகம் கற்மங்கள் - ஜாசதகர்மம் முதலிய சடங்குகள்:

ஜாதகர்மம் - பிள்ளை பிறந்தவுடனே பிதா வடக்குத்திசையிற் சென்று ஸ்தாநம்பண்ணி எள், நெல், பொன், வஸ்திரம், பசு, பூமி இவைகளில் இயன்றதான தருமங்கள் செய்து, சுபக்கிரக முதயமாகத் தன் பந்துக்க்ளுடனே புத்திர தரிசனஞ் செய்து பிள்ளை பிறந்த பதினொரு தினத் துக்குள்ளே பெவார்ங்களிலே, அச்வினி, ரோகிணி. புநர்பூசம், பூசம், உத்திரம். அத்தம், அதுவும். த்ெதிராடம், திருவோணம். அவிட்டம், சதயம், இந்த நஷத்திரங்களிலே இருத்தை.ே அமாவாசை பூரணை ஒழிந்த திதிகளில், விருஷபம், மிதுனம், கர்க்காடகம், கன்னி, துலாம். தனு, மீனம் இவ்விராசிக்ள்ல் சுபகிரக முதயமாக ஜாதகருமஞ்செய்வது. இேருத்தை . சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி என்னும் திதிகள்) - (அபிதான சிந்தாமணி பக். 1ே9)