பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தஞ்சை மராட்டிய



களை தண்டகப்படிக்கு பண்ணிவைச்சு சறபோஜி ஹாஜா என்று பேரும் வைத் தார்கள். இந்த சறபோஜி ஹாஜாவுடைய வமிசம் யெந்த வமிசத்தி லானவ ரென்று கொஞ்சம் தெரியும்படியாக பின்னால் எழுதி வருகுது.

அதென்னவென்றால் போசலே வமிசத்தில் முதல் செம்புறாஜா முதல் பதிமூணாவது புருஷன் பாவாஜி ஹாஜா அவருக்கு மாளோஜி ஹாஜா விட்டோஜி றாஜா என்று ரெண்டு பிள்ளைகள் பிறந்துது. மாளோஜி ஹாஜாவுக்கு சாஜி ஹாஜா பிறந்தார். சாஜி ஹாஜாவுக்கு சிவாஜி ஹாஜா பிறந்தார்; யேகோஜி றாஜா பிறந்தார். அவாளுடைய சவவிஸ்த்தாரம் எழுதி இரண்டாவது புத்தி ரன் விட்டோஜி ஹாஜாவுடைய கீர்த்தியும் கொஞ்சம் எழுதி, அந்த விட்டோஜி றாஜாவுடைய சந்ததியி லிப்போ சாதாரிலேயும் பாணாளாவிலேயும் றாச்சியம் பண்ணுகிறவாளுடைய பூற்வோத்திரம் சவவிஸ்தாரமாய் மேலே எழுதி யிருக்குதே, இப்போ துளஜா மஹா ஹாஜா தத்து வாங்கின. சறபோஜி றாஜா அந்த விட்டோஜி ஹாஜாவுடைய வமிசத்தி லுண்டானவ ரானபடியினாலே அந்த விஸ்த்தாரம் கொஞ்சம் எழுதுகிறேன்.

விட்டோஜி றாஜாவுடைய பிள்ளைக ளெட்டுப் பேரிலே கடைசி பிள்ளை திறியம்பக ஹாஜாவுக்கு பிறந்த பிள்ளைகளிலே கெங்காஜி ஹாஜாவென்று ஒரு பிள்ளை; அந்த கெங்காஜி றாஜாவுக்கு பூவாஜி' ஹாஜா என்று ஒருத்தர்; தாபூஜி றாஜா என்று ஒருத்தர். இந்த ரெண்டு பிள்ளைகளில் பூவாஜி ஹாஜா' வுடைய பிள்ளை கெங்காஜி ராஜா. கெங்காஜி ராஜாவுடைய பிள்ளை சுபான்ஜி ஹாஜா. சுபான்ஜி ஹாஜாவுடைய பிள்ளைகள் பூவாஜி" றாஜாவென்றும் சாஜி ஹாஜா வென்றும் ரெண்டு பிள்ளைகள். இந்த சாஜி ஹாஜாவுக்குப் பிறந்தவர் சறபோஜி றாஜா. அவரை துளஜா மஹா ஹாஜா உத்தம வமிசமானபடி யினாலே விகிதப் படிக்கு சாஸ்த்திரப்படிக்கு தத்துவாங்கி ஆனையின்பேரிலே நவபத்து அடித்துக் கொண்டு பயணமூச்சுடும் சக்கரை வழங்கி யெல்லா உறமுறையார்களோடே சகலவிதமும் பண்ண வேண்டிய சடங்குகளை நிறைவேற்றி" அந்த வேளை

75. முதல் - ஆதிபுருஷரான (போ. வ. ச. பக். 127) 76. அட்டவணை 1 பார்க்க 77. பணாளாவிலேயும் - புனாவிலேயும் (டி3762) 78. பூவாஜி - உவாஜி (போ. வ. ச.பக். 127)

79. இங்கு, போ. வ. ச. வில் (பக். 127) 'தாவோஜி ராஜாவின் சந்ததி விஷயமாய்ப் பிறகு வேண் டிய இடத்தில் விவரிக்கப்படும்” என்று ஒரு வாக்கியம் அதிகமாக உளது.

80. பூவாஜி - உவாஜி (போ. வ. ச. பக். 127) 81, விகிதப்படிக்கு - சரியானமுறையில் (போ. வ. ச. பக். 128) 82. நவபத்து அடித்துக்கொண்டு - சகல வாத்ய வைபவங்களுடன் (போ. வ. சி. பக். 128)

Noubet: Cermonial Music the right to use which was specially granted by the government- (Records of Fort St. George, Country Correspondence Military Dept., 1757, Madras 1913, Index, Page XIII) 83. பயணமூச்சுடும் - ஊரில் எல்லோருக்கும் (போ. வ. ச. பக். 1289

84. ஹமுறையார்களோடே சகல விதமும் பண்ணவேண்டிய சடங்குகளை நிறைவேற்றி - சுற்றத் தாருக்கும் விருந்து செய்வித்தார் - (போ. வ. ச. பக். 1889