பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154

தஞ்சை மராட்டிய

சுலேப்பு[1] போட்டது பாக்கி வைத்துக் கொண்டு போறசிபாய்கள் இப்படிக்கொத்தவர்கள் எல்லாம் இருனுாறு பேர் இதுகளுக்கெல்லாம் சிலவுக்குத் தாமே குடுத்து ரிசிடெண்டு மேஸ்த்தர் பிளாக்குபிறன்[2] சாயபு பின்னாலே அனுப்பிவித்தார். இது ௲அளக[3] வருஷம் சூன்மீ 7௨.

முன்னாலே மஹா றாஜா தமக்குக் கல்லியாணம் பண்ணிக் கொள்ளாதத்துக்கு முன்னே[4] ஒரு ஸ்ரீ ரூபசாலி குணசாலி யோக்கியமுள்ளது யெவ்வறணம் இப்படிக்கொத்த ஸ்ரீயை[5] வைத்துக் கொண்டிருந்தார். அவாளும் மஹாறாஜாவுடைய சித்தானுசார[6] மாய் நடந்து கொண்டு வந்தார்கள். அப்படிக் கொத்த ஸ்ரீக்கு ரெண்டு பிறசவமாய் ரெண்டு பிறசையும் நஷ்டமாய்[7] போய்விட்டுது. ரெண்டாம் பிறசவத்தில் அந்த ஸ்ரீயும் நஷ்டமாய்ப் போனபடியினாலே அந்த ஸ்ரீயுடைய குணாதிசெயத்தினாலே மஹா றாஜாவுக்கு அதே ஒரு விசனத்துக்கிடமாச்சுது. ஆகிலுமந்த பூர் நிரியாண சமையத்தில்தன்[8] பேராலே ஒரு நல்ல தற்மம் அன்னசத்திரம் ஆக வேணுமென்று கோறினாள். அதை அங்கீகாரம் பண்ணி உத்தம உபையுக்த்தமான[9] சேதுமாற்கத்திலே சத்திரம் அக்கிரகாரம் தேவாலையம் ஸ்ரீங்காரவனம்[10] குளமித்தனையுமாகத் தக்கனையா யாறம்பித்து அந்த ஸத்திரத்துக்கு முக்த்தம்மாள் சத்திரம் மென்று பேரும் வைத்து வேலையும் நடந்து கொண்டு வருகுது. இதுகளெல்லாம் அந்த ஸ்ரீயுடைய ஸ்மறனை யென்னேரமும் பண்ணுகிறதுக் கேதுவாயிருக்குது.


in European style (Records of Fort St. George, Country correspondence, Military Department 1757, Madras, 1913 Index Page XVI)

  1. கலேப்பு - Gallop (?)
  2. Captain William Black burne (Letter of Clive to the Rajah of Tanjore dated 5-4-1801 and the acknowledgement of the Rajah dated 11-4-1801 - Records of Fort St. George, Country Correspondence, Political Dept. 1801, Page 39-40).
  3. கி.பி. 1801
  4. 'எல்லா குணங்களும் பொருந்திய' என்றுள்ளது (பக். 136)
  5. 'எல்லா குணங்களும் பொருந்திய' என்றுள்ளது (பக். 136)
  6. சித்தானுசாரம் - மனதுப்படிக்கு (போ. வ. ச. பக். 136)
  7. நஷ்டமாப்-இறந்து (௸)
  8. நிரியானசமயத்தில் - இறக்கும் தறுவாயில் (௸)
  9. உபையுக்த்தமான - உபயோகமுள்ளதுமான (௸)
  10. ஸ்ரீங்காரவனம்-சிங்காரவனம்