பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

155


அதின் பிற்பாடு தீர்த்த யாத்திரைக்கு உத்தேசிதது சோள தேசம் ஒரட்டும்"[1] ஒரு விச், ஶ்ரீரங்க யாத்திரை ஒரு விசை. சங்குமுகம் ஒருவிசை.[2] பழனி யாத்திரை ஒரு விசை, இப்படி நாலு விசை யாத்திரை பண்ணச்சே கூட றெசி டெண்டு மேஸ்த்தர் பிளாக்கி பறன் சாயபும் வந்து"[3]வழிகளிலே அந்தந்த இடங் களிலே மஹா ஹாஜாவுடைய மேன்மையின் படி மரியாதைகளை நடப்பிவிச்சிக் கொண்டிருந்தார். அவருடைய உபகாரத்தை மஹா றாஜா ருெம்பவும் எண்ணு கிறார். கும்பினியாருக்கும் மஹா ஹாஜாவுக்கும் ஆன திறீட்டியிலே மஹா றாஜாவுக்கு தம்முடைய சீர்மையைப் போலே கும்புனி சீர்மை ஒரட்டுக்கும் மரியாதைகள் நடக்கு"[4]மென்று வாக்குத்தத்தம் பண்ணி இருந்தத்தை ரெசிடெண்டு மேஸ்த்தர் பிளாக்கிபற்ன் உறுதியாக்கினார்.

இன்னமொரு உபகாரம் மேஸ்த்தர் பிளாக்கிபற்ன் சாயபு பண்ணின தென்னவென்றால் கும்பினியாருக்கு மஹா ஹாஜா அவர்கள் தேசத்தை ஒப்பிவிக் கிறபோது மஹா றாஜாவுக்கு உபயுக்தமாயிருக்கிற"[5] காரியங்களை கும்பனியார் சம்மதிக்கத் தக்கனையாகப் பண்ணினது மல்லாமல், அந்த திறிட்டியிலே அன்னிய தேசத்தான் பேரிலே கும்பனியார் பாளைய மெடுக்கச்சே யாகட்டும், அன்னிய தேசத்தார் கும்பனியார் பேரிலே பாளைய மெடுக்கச்சே யாகட்டும் மஹா றாஜாவுடைய கோட்டையிலே இங்கிலீசுகாறர் டாணையம் வைக்கிறதென்று கறாறாயிருந்துது.[6]" அப்படியே கும்பனியார் அன்னிய தேசத்தின் பேரிலே பாளைய மெடுத்த போது கறார்படிக்கு டாணையம் வைக்கிறத்துக்கு பிறையெத்தின மானார்கள். அப்போ மேஸ்த்தர் பிளர்க்கிபற்ன் சாயபு, மஹா றாஜாவுடைய நடத்தை யோக்கியதை விசுவாசம் கும்பனியாருக்கு அறியப்பண்ணி,[7]" அவாளுடைய பிறியம் மஹாருஜாவுக்கு கிடைக்கத்தக்கனையாகப் பண்ணி.[8]" அந்த வார்த்தையை நிறுத்தினார். அதைத்தொட்டும் (மேஸ்த்தர்) பிளாக்கிபற்ன் சாயபுடைய உபகாரத்தை அநேகமாய் எண்ணுகிறார்."[9]

-


  1. 34. ஒரட்டும் - முழுவதும் (போ. வ. ச. பக். 136)
  2. 35. கங்கா யாத்திரை விசை என்று போ. வ. ச. வில் உள்ளது. மராட்டியக் கல்வெட்டிலும் Ganga Yaatra Ek Kitha என்றுள்ளது. (சங்கமுகம் - சங்குமுகம் - காவிரிகடலொடு கலக்குமிடம் ஒருவிசை - ஒரு தடவை)
  3. 36. வந்து' என்ற சொல் போ. வ. ச. வில் இல்லை (பக். 137)
  4. sy. The ninth article affirmed that the Rajah would be treated with all the attention, respect and honour which was due to a friend and ally of the British nation - (Aitchison, Vol. V Page, 289–90)
  5. 38 உபயுக்தமா யிருக்கிற - சாதகமான (போ. வ. ச. பக். 137)
  6. so. The tenth article left the fort of Tanjore in possession of the Rajah, but authorised the company to use it as a military post if the English found it so essential during a war fought in the Carnatic - (Rajayyan, Page 110)
  7. 40 முதல் 41 வரை டி376: சுவடியில் இல்லை
  8. 40 முதல் 41 வரை டி376: சுவடியில் இல்லை
  9. 42. அநேகமாய் எண்ணுகிறார் - மிகவும் மெச்சினார் (பேர. வ. ச. பக். 188)