பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

157


இப்போ சரபோஜி மஹா றாஜா சகல செனத்தையும் சகல மதஸ்தாரையும்[1] வைசம்மிய மன்றியில் சந்தோஷமாய் [2]அந்தந்தமதத்து வேதத்தின்படியே நடப்பிவித்து சகலசெனத்துக்கும் விசனம் வராமல்படிக்கு யுக்திமாற்கமாய்[3] பரிபாலனம் பண்ணிக்கொண்டு யெப்போதும் சிவபூசை பண்ணிக்கொண்டு சிவ புராணங்கள் முதலான உத்தம சரித்திரங்களைக் கேட்டுக் கொண்டு யாத்திரைகளையும் பண்ணிக் கொண்டு சன்மாற்கத்திலேயிருக்கிறார்.

ஶ்ரீமத் போசல வம்சத்தின் பூரண சந்திரன் - இந்துபதி[4] சிரேஷ்டியா யிருக்கப்பட்டவர் - பூரீசாம்பசிவ பிறசாத பிறபாவத்தினால்[5] அடையப்பட்ட மாற்காபத்தினால்[6] டில்லி சாத்துற்பாகத்துக்கு சுவாதந்திரியர்-டில்லியுடைய ராஜாவுக்கு விபஷ்சத்துக்கு யோக்கியர்[7] சறுவபூம[8] ராஜாக்களுக் கெல்லாம் சோபாயமானவீர்[9] மஹா றாஷ தேசம் சோள தேசம் அதிபதியாயிருக்கப் பட்ட புண்ணிய சுலோக ராஜாக்களுடைய சரித்திரம் சகல மனோபீஷ்டத்[10] தையும் குடுக்கப்பட்டத்தை மாறாஷ்ட்ட பிறாமண சாதி[11] இப்போ சோளா தேசாதிபதி ரீமத் சத்திரபதி மஹா ஹாஜா ரீ சறபோஜி றாஜா சாயபு அவர்களுடைய திஜ[12] சேவுகன் சிட்டினிசு[13] பாபு ஹாய[14] றர்லே யெழுதப்பட்டது.


மூன்றாவது கன்னிகை பிறந்தாள். அந்தக் குழந்தைக்கு பாயம்மா பாயி சாகேப் என்று பெயரிட்டனர்.” [15]

இச்செய்தி டி 3782 டி 3 190 ன்ன்ற இரண்டு மெக்கன்சி சுவடிகளிலும் இல்லை. தமிழ்ப்பகுதியை மராட்டியில் மொழிபெயர்த்துக் கல்வெட்டுச் செய்யுங்கால் சில விடுபட்டும், வில் சேர்க்கப்பட்டும் உள்ளன. அங்கனம் சேர்க்கப்பட்டவற்றுள் இப்பகுதியும் ஒன்றாதல் கூடும்.

  1. 51. சகல மதஸ்தாரையும் - எல்லா ராஜ்யங்களிடத்திலும் (போ. வ. ச. பக். 139)
  2. 52. வைசம்மிய மன்றியில் சந்தோஷமாய் - துவேஷ புத்தியை நீக்கி ய்ாரிடமும் அலகடிய புத்தி யில்லாமல் (போ. வ. ச. பக். 139). .
  3. 53. யுக்த மாற்கம்ாய் - சரியான மார்க்கத்தில் (போ. வ. ச. பக். 139)
  4. 54. பூரணசந்திரன், இந்துபதி - உதித்தவர்களும் தம்பதி (ചേ7. வ. ச. பக். 13 தி)
  5. 55. பிரசாத பிரபாவத்தால் - அருளால் (போ.வ. ச.பக். 1:9) -
  6. 56. மாற்காபத்தினாலே - இச்சொல் போ. வ. ச. வில்
  7. சாத்துற்பர்கத்துக்கு சுவாதந்திரியர் -4-ல் ஒருபாகம் வாங்கும் பாத்தியதை நிலை நாட்டி வந்தவர் (போ. வ. ச. பக். 139)
  8. 58. விபஷ்சத்துக்கு யோக்கியர் - எதிர்த்து நின்றவர் (போ. வ. ச. பக். 139)
  9. 59. சறுவபூம - சார்வபெளம - சக்கரவர்த்தி
  10. 60. சோபாயம் ஆனவர் - நல்வழி காட்டுபவர்
  11. 61. மனோபீஷ்டம் - மனவிருப்பம்
  12. 62. பிறாமணசாதி - முதல் வர்ணத்தைச் சேர்ந்தவர் (போ. வ. ச. ய்க்.189) இதற்குப்பிறகு போ. வ. ச.வில் 'பகவந்தராயரின் பெளத்திரரான விட்டலராயரின் புத்திரரும்' என்றுளது
  13. 63. திஜ - நிஜ (டி 3782) - உண்மையான (போ. வ. •. ս*. I39)
  14. 64. சிட்டினிசு - Chitnis - காரியதரிகி (பேர். வ. ச. பக். 139)
  15. 68. Bapu Rayar - T.V. Mahalingam, Mackenzie Manuscripts Vol. I. Madras University 1972, Page 142 (Under Manuscript No. 21.) Bapu Rao row