பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தஞ்சை மராட்டிய


நின்று போர் புரிந்து நிஜாம்ஷாவை வெற்றி பெறச் செய்தனர். நிஜாம்ஷா மகிழ்ந்து நாலிலொரு பங்கு (செளத்)சாகிர் கொடுத்து அவ்விருவரையும் தம்மிடமே இருத்திக் கொண்டார்.

மாலோஜிக்குக் குழந்தைகள் இல்லை. ஷா ஷரீஃப் பே அலி கலந்தர் என்பவரை வணங்க அவர் நாகினி பத்மினி என்ற பட்டாக்கத்திகளும். லங்கோடு, கலந்திரா, பஞ்சா ஆகியவற்றையும் கொடுத்து இரண்டு பிள்ளைகள் பிறக்கும் என்றாள் செய்தார். சகம் 1531 (கி.பி. 160 ) இல் பிறந்த குழந்தைக்கு ஷாஜியென்றும், அடுத்துப் பிறந்தவருக்குச் சரபோஜி (ஷரீஃப்ஜி) என்றும் பேர் வைக்கப்பட்டது.

ஷாஜிக்கு ஐந்து வயதாகிற போது கோலாபுரத்தரசருக்கும் நிஜாம் ஷாவுக்கும் போர் ஏற்பட்டது. மாலோஜி நிஜாம்ஷா பக்கம் போர்க்குச் சென்று இறந்தார்.

ஷாஜியும் சரபோஜி (ஷரீஃப்ஜி)யும் சிறுகுழந்தைகள் ஆயினமையின் அவர்களுடைய சிறிய தகப்பனார் விட்டோஜியின் அரவணைப்பில் வளர்ந்தனர்.

ஷாஜி, துக்காவுபாயியை முதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர்ச் சகம் 1543 (சி.பி.1620)இல் சாதாராவில் அரசரானார். அப்பொழுது யாதவ ராஜா (லகோஜி ஜாதவ்ராவ்) தனது மகன் ஜிஜாபாயியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஷாஜியின் தம்பி சரபோஜி (ஷரீஃப்ஜி)க்கு விசுவாசராவுடைய மகள் துர்க்காபாயி திருமணம் செய்விக்கப்பட்டாள்.

விட்டோஜியின் எட்டு மக்களும் நிஜாம் பாதுஷாவின் அரவணைப்பில் இருந்தனர்.

2ஒருகால் நிஜாம்ஷா ஒரு சதிர் நடத்தினார். அச்சதிர்க்குப் பலர் வந்திருந்தனர். சதிர் கலைந்து போகிற போது கண்டாகலே என்கிற பெரிய சர்தாரின் யானை பலரைக் கொன்றது. யாதவ ராஜாவின் மகன் தத்தாஜி அந்த யானையை வெட்டப் போனார். விட்டோஜியின் மக்களில் சம்பாஜி கேலோஜி ஆகிய இருவரும் தத்தாஜியை, "அந்த யானையை வெட்டாதே" என்று தடுத்தனர். தத்தாஜி அவர்களோடு சண்டை போட்டார். சம்பாஜியின் கையால் வெட்டுண்டு இறந்தார். யாதவராஜா, சம்பாஜி கேலோஜி ஆகியோர் பேரில் போர்க்கு வந்தார். அப்பொழுது ஷாஜி தன்னுடைய மாமனார் என்றும் பாராமல் யாதவ ராஜாவுடன் போர்க்கு வந்து அடிபட்டு மூர்ச்சையாய் விழுந்தார்; சம்பாஜி இறந்தார். ஷாஜி மூர்ச்சை தெளிந்து எழுந்து போர் செய்ய வருங்கால், நிஜாம்ஷா செய்தி யறிந்து போர் செய்வதை நிறுத்தச் செய்து எல்லோரையும் அனுப்பி விட்டார்.

யாதவராஜா வெறுப்புற்றார். இதனை அல்லியேதில்ஷா அறிந்து யாதவ ராஜாவைத் தம்பக்கம் சேர்த்துக்கொள்ள முயன்றார். அதற்கு இசைந்த யாதவ