பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தஞ்சை மராட்டிய


அப்பொழுது நிஜாம்ஷா, ஒரு சேனையுடன் சென்று தரியாகானை எதிர்க்குமாறு ஷாஜியை ஏவினார்; யாதவராஜாவைத் தன்னைக் காணுமாறு பணித்தார்.

அப்பொழுது டிாஜியின் இரண்டாவது மனைவி ஜிஜாபாய் கருவுற்றிருந்தாள். ஷாஜி அவளுக்குக் காவலாகச் சில சேனைகளைச் சிவனேரியில் வைத்துத் தரியாகானொடு போர்க்குச் சென்றார். அவர் வெற்றியோடு திரும்புவதற்குள், ஜிஜாபாய் சகம் 1551 (கி.பி. 1629)இல் ஆண்மகவை ஈன்றாள். ஷாஜியும் வெற்றியுடன் திரும்பினார். சிவனேரியில் பிறந்தமையாலே அந்தப் பிள்ளைக்குச் 'சிவாஜி' என்று பெயரிட்டார்.

இதற்கிடையில், யாதவராஜா நிஜாம்ஷாவைக் காணச் சென்றார். அப்பொழுது சேனைத்தலைவராக இருந்தவர் பத்தேகான் (Futch Khan); இவர் அம்பர் கானின் மகனாவர். யாதவராஜா வந்தால் தன் செல்வாக்குக் குறையும் என்று நினைத்த பத்தேகான், நிஜாம்ஷாவின் மனத்தைக் கலைத்து, யாதவ ராஜா வரும்பொழுது சிறிது மரியாதைக்குறைவு செய்யுமாறும், அதனால் வருந்தித் திரும்பினால் கொன்றுவிட வேண்டுமென்றும் கூறினார். நிஜாம்ஷா இதனை ஏற்றுக் கொண்டார். யாதவராஜாவும் வந்தார். மரியாதைக் குறைவு ஏற்பட்டது. யாதவறாஜா பொறுக்காமல் தன் மக்களுடன் திரும்புங்கால், பத்தேகான் ஏவலின்படி சிலர் சூழ்ந்துகொண்டு யாதவராஜாவைக் கொன்றனர்.

இவற்றை ஷாஜி கேள்விப்பட்டார்; நிஜாம்ஷாவின் தொடர்பை வெறுத்தார்; சிவனேரியிலிருந்த தன் மனைவியை அழைத்துக்கொண்டு சாத்தாராவுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் நிஜாம்ஷாவின் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.

சாத்தாராவில் ஷாஜியிருக்கும் பொழுது அவர் முதல் மனைவி துக்காபாயி ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அப்பிள்ளைக்கு நான்காவது ஏ கோஜி என்று பெயர். பிறந்தது சகம் 1552; கி. பி. 1630.

3 தரியாகான் தபதிநதிக்கரையில் தங்கியிருந்தார். யாதவராஜா கொலையுண்டார்; ஷாஜி சாத்தாராவுக்குச் சென்று விட்டார்' என்பவற்றையறிந்த தரியாகான், நிஜாம்ஷா பேரில் படையெடுத்தார். நிஜாம்ஷா தாராகிரிக் கோட்டையிலிருந்தார். தாராகிரிக் கோட்டையைத் தரியாகான்பிடித்துவிட்டால் தனக்குத் தொல்லை மிகுமென்று நினைத்த அல்லியேதில்ஷா அந்தக் கோட்டையின் பேரில் படையெடுத்தார். இது டில்லிக்குத் தெரிந்தது. உடனே அவுரங்க சீபு தக்காணத்துக்கு வந்தார். தரியாகானுடன் சேராமல் தான் ஒரு பக்கத்தில் போர் செய்தார். அல்லியேதில்ஷாவும் பிறிதொரு பக்கத்தில் போர் செய்தார். நிஜாம்ஷா தோற்றார்; அவுரங்கசீபுக்கு அடங்கியவரானார். பின்னர் அவுரங்க புே அல்லியேதில் ஷாவுடனே போர் செய்து துறத்தித் தேவகிரியில் தங்கியிருந்தார்.